பீரியட்ஸ் பிரச்சனை.. பிக் பாஸ் பாத்ரூமுக்குள் கண்ட காட்சி.. கடுப்பான போட்டியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த சம்பவம் தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்களே இல்லை.. எங்களால் எல்லாமே முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள் டாஸ்க் என்று வரும்போது உமன் கார்டு காட்டி எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறார்கள்.

இதற்கு முன்பு ஏற்கனவே வீட்டு தலைவராக இருந்த ஷமா இதுபோல ஒருமுறை வயிறு வலி என ஆக்சன் போட்டு விஜய் சேதுபதியிடம் திட்டு வங்கி இருந்தார். அதுபோல லட்சுமி பிரியாவும் ஒரு டாஸ்க்கில் எனக்கு வாந்தி வருகிறது என்று நாடகம் போட்டு கடைசியில் அது டாஸ்க்காக போட்டு ஏமாற்றம் என்று சொல்லி இருந்தார். இப்போது அதே மாதிரி தான் சாவின்யாவும் செய்திருக்கிறார்.

பிக் பாஸ் எபிசோடு

அதாவது ஏற்கனவே எலிமினேட் ஆன மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் யாரை ரீப்ளேஸ் செய்ய நினைக்கிறார்களோ அவர்களுடைய கைகளில் தங்களுடைய கைகளை இணைக்கும் ஒரு கயிறை கட்டிக்கொண்டு பிக்பாஸ் சொல்லுற வரைக்கும் இருக்க வேண்டும். அதற்கு இடையில் யாரேனும் அவிழ்த்துவிட்டு நான் இந்த டாஸ்கிலிருந்து வெளியேறுகிறேன் என்று சொன்னால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

அதுபோல வார இறுதியில் இந்த 3 போட்டியாளர்கள் மற்றும் அவர்கள் செலக்ட் செய்த 3 போட்டியாளர்கள் இவர்கள் 6 பேரில் 3 பேர் வெளியே அனுப்பப்படுவார்கள் என்றும் பிக் பாஸ் சொல்லி இருக்கிறார். இதனாலயே உள்ளே ஒரே சண்டைதான் போய்க்கொண்டிருக்கிறது. சாவின்யா பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு அஸ்மிதாவை தேர்ந்தெடுத்து அவருடன் கைகளை இணைத்து இருக்கிறார்.

நேற்றிலிருந்து வரும் ப்ரோமோக்களில் இவர்கள் இருவரும் சண்டை போட்டு கத்திக் கொண்டிருப்பதை பார்க்கும்போது பதட்டமாகவும், கடுப்பாகவும் இருக்கிறது. உள்ளிருக்கும் போட்டியாளர்கள் கூட இவர்கள் இருவரும் கத்துவதை பார்த்து தள்ளியே நிற்கிறார்கள். ஆனால் நேற்று நள்ளிரவில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது, அதாவது சிவன்யாவும் அஸ்மிதாவும் தூங்காமல் உட்கார்ந்து இருக்கிறார்கள். இருவருடைய கைகளும் கட்டப்பட்டு இருப்பதால் உனக்கு நான் சளைத்தவள் இல்லை, எனக்கு நீ சளைத்தவர்கள் இல்லை என்று இருவரும் அங்கே இங்கே இழுத்துக் கொண்டே இருப்பதால் இவர்கள் தூங்கவில்லை.

Bigg Boss Vijay Sethupathi Vijay TV

பீரியட்ஸ் பிரச்சனை

அப்போது சிவான்யா எனக்கு பாத்ரூம் போகணும்.. எனக்கு பீரியட்ஸ் வயிறு வலி அதிகமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அஸ்மிதா நீ 4 மணி நேரத்துக்கு முன்பு இதைத்தானே சொன்னா? போய் பார்த்துட்டு பீரியட்ஸ் ஆகல என்று வந்த.. அதே போல இப்பவும் மீண்டும் சொல்லிட்டு இருக்கிறியா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு சிவான்யா நீங்க பீரியட்ஸ் நேரத்தில் கூட அடுத்த பெண்ணின் வலியை புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க.. நீங்களும் இதே வலியை அனுபவிச்சிருப்பீங்க தானே? எனக்கு பீரியட்ஸ்க்கு முன்னாடி வருகிற வலி வருகிறது அதனால் பாத்ரூம் போக வேண்டும் வாங்க என்று கூப்பிட முதலில் மறுத்து கொண்டு இருந்த அஸ்மிதாவும் பிறகு சிவான்யாவை பாத்ரூம் கூட்டிக்கொண்டு போயிருக்கிறார்.

அஸ்மிதா சொன்ன விஷயம்

அங்கு அவர் போயிட்டு வந்த பிறகு அஸ்மிதாவிற்கு ஒரு சந்தேகம் இருந்திருக்கிறது. அவர் மீண்டும் பாத்ரூமில் போய் செக் பண்ணும் போது அவர் அங்கே நாப்கின் செக் பண்ணி பார்த்ததில் அவருக்கு பீரியட்ஸ் ஆகவில்லை என்று அஸ்மிதா கண்டுபிடித்தாராம். இது பற்றி வெளியே வந்து லட்சுமி பிரியாவிடம் கூப்பிட்டு சொல்லி இருக்கிறார். முதலில் லட்சுமி பிரியாவும் இதுபோல விளையாடாதே என்று சிவான்யாவிடம் சொல்லி இருக்கிறார். பிறகு அஸ்மிதாவிடம் இதுவும் ஒரு கேம் பிளே தான், அதை நீங்கதான் புரிஞ்சுக்கணும் என்று சொல்லி இருக்கிறார்.

இதை பார்க்கும் ரசிகர்களுக்கு தான் கடுப்பாகிறது. இத்தனை பேர் இருந்து விளையாடுற ஒரு நிகழ்ச்சியில் இப்படித்தான் உமன் கார்டு எடுத்து விளையாடனுமா? என்று கேள்வி கேட்கிறார். காரணம் இவர்கள் இப்படி அடிக்கடி வயிறு வலி நாடகம் போட்டு கொண்டு இருந்தால் நிஜத்தில் ஒருவருக்கு உடல்நல பிரச்சனை வந்தால் யாரும் நம்பாமல் போய்விடுவார்கள். அதனால் டாஸ்க்கில் உண்மையாக விளையாட வேண்டும், இப்படி நாடகம் போட்டுக் கொண்டிருப்பவர்களே வெளியே அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ரசிகர்கள் கருத்து

ஏற்கனவே சிவன்யா இதுபோல ஒரு டாஸ்க்கில் எனக்கு உடல்நல பிரச்சனை என்று சொல்லி அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார். இப்போ மீண்டும் பீரியட்ஸ் என்று சொல்லி கொண்டிருக்கிறார். இவர் ஜெவிக்ஷனான சமயத்தில் மேடையில் நின்று பேசியது கூட சுவாரசியமாக இருந்தது. அதனால் விளையாட்டு சுவாரஸ்யமாக கொண்டு போனால் இவருக்கு இன்னும் ரசிகர்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையே தனக்கு கிடைத்த நல்ல பெயரை தானே கெடுத்துக் கொள்வது போல இவர் செயல்படுகிறார் என்ற கருத்தும் குவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+