அப்பாவால் நடிக்க வந்து..யாரும் சொல்லாமல் திரைப்படத்தில் ஆபாச காட்சி..மனம்திறந்த சீரியல் நடிகை நித்யா
முன்னணி சீரியல்களில் நடித்து வரும் நித்யா ரவீந்தர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றி கூறியிருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடித்து வரும் நடிகை நித்யா ரவீந்தர் தன்னுடைய ஆரம்பகால சினிமா பயணத்தை பற்றி பேசி இருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் தான் நடிக்கும் போது என்ன மாதிரி நடிக்கப் போகிறோம் என்கிற சீன்களை குறித்து எதுவும் தகவல் தெரிவிக்க மாட்டார்கள் என்று கூறி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் லாரி என்ற மலையாள திரைப்படத்தில் இவர் ஆபாச காட்சியில் நடித்தது குறித்து பல வருடங்களுக்குப் பிறகு மனம் திறந்து பேசி இருக்கிறார்.

மலையாளத் திரைப்படத்தில் அறிமுகம்
நடிகை நித்யா ரவீந்தர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் இருந்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இவர் அறிமுகமானது மலையாள திரைப்படங்களில் தானம். குருதி குலம் என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமாக மாரியம்மன் திருவிழா, குடும்பம் ஒரு கதம்பம், சாவித்திரி ராணி, தீர்வு, அந்த சில நாட்கள், தாவணி கனவுகள், பம்மல் கே சம்பந்தம், உத்தமபுத்திரன், தொண்டன் என பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகைகளுக்காகவும் இவர் டப்பிங் பேசி இருக்கிறாராம்.

சீரியலிலும் நடிப்பு
குறிப்பாக நடிகை மீனா, நளினி போன்றவர்களுக்கு அதிகமான திரைப்படங்களில் குரல் கொடுத்திருக்கிறார். நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு வானமே எல்லை என்னும் திரைப்படத்திலும் இவர் டப்பிங் பேசியிருக்கிறாராம். அது மட்டும் அல்லாமல் இவர் சீரியலில் பல முன்னணி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். வாணி ராணி, சிதம்பர ரகசியம், ராஜராஜேஸ்வரி, தீர்க்க சுமங்கலி, உதிரி பூக்கள், அபூர்வராகங்கள், மின்னலே தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே, புதுப்புது அர்த்தங்கள், நம்ம வீட்டு பொண்ணு, தாலாட்டு, சுந்தரி என பல சீரியல்களில் இவர் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

லாரி திரைப்படத்தில் நடிப்பு
இந்த நிலையில் இவரது நடிப்பில் 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான். லாரி திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதாப் போத்தன் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நித்யா கதாநாயகியாக நடித்திருப்பார். நாயகியாக ஆரம்ப காலகட்டத்தில் அந்த படத்தில் நித்யா கொஞ்சம் கிளாமராக தான் நடித்திருப்பார். இந்த நிலையில் லாரி திரைப்படத்தில் தன்னுடைய காட்சிகள் குறித்து மனந்திறந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அப்பாவால் நடிப்பு
இவருடைய அப்பா ஒரு கவர்மெண்ட் ஆபீஸராக இருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய அம்மா ஹவுஸ் வைப்பாக தான் இருந்திருக்கிறார். இவருடைய அப்பா ஒரு நாடகக் குழுவை வைத்து இருந்தாராம். அதில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். முதல் முதலாக இவர் குருதி கலம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இருக்கிறார். இவருக்கு ஆரம்பத்தில் நடிக்கவருவதற்கு விருப்பமே இல்லையாம். ஆனாலும் இவருடைய தந்தைக்கு இவரை எப்படியாவது ஒரு நடிகையாக பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது. அதனால் படிப்பை நிறுத்திவிட்டு நடிக்க வேண்டுமா என்று இவர் கேட்ட போது படிப்பு எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம் ஆனால் நடிக்கத்தான் முடியாது என்று கூறி நடிப்புத் துறைக்கு என்னை கொண்டு வந்தார் என்று கூறுகிறார்.

லாரி திரைப்படம்
இவர் நடிக்க வந்ததால் தொடர்ந்து படிக்க முடியாமல் தன்னுடைய படிப்பை ஒன்பதாம் வகுப்பு உடன் நிறுத்தி இருக்கிறார். அந்த நிலையில் தான் இவர் லாரி திரைப்படத்தில் நடிக்கும் போது சில காட்சிகள் ஆபாசமாக இருந்ததாம். ஆனால் அது அப்போது எனக்கு தவறாக தெரியவில்லை. எனக்கு கடவுள் ஒரு அப்பாவியான முகத்தை கொடுத்ததால் எதுவுமே அதில் மிக ஆபாசமாக தெரியவில்லை. படத்தில் என்னை வில்லன் கடத்தி சென்று கற்பழிக்க முயல்வது போன்ற காட்சி இருந்தது. அதுக்கு மட்டும் அல்லாமல் சில படங்களில் மழை பொழிவது போன்ற சூழ்நிலை இருக்கும்.

மழை காட்சிகள்
அந்த காலத்தில் மலையாள படங்கள் என்றாலே மழைக்காட்சியை தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அதை பற்றி எனக்கு யோசிக்க கூட தெரியாமல் தான் இருந்தது. அது மட்டும் அல்லாமல் யாரும் இந்த மாதிரியான காட்சி அமைப்புகள் இருக்கின்றன, இப்படியான சூழ்நிலைகள் இருக்கிறது நீங்கள் நடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். அப்படித்தான் லாரி படத்தில் நடிக்கும் போதும் நடந்தது. எனக்கு சீன் எதுவும் தெரியாது. நான் நடித்து முடித்தேன் என்று பேசி இருக்கிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு என்னும் சீரியலில் சாந்த சொரூபமாக நடித்து வருவதை பார்க்க நெட்டிசன்கள் பலர் அவரா இவர் இப்படி எல்லாம் நடித்திருக்கிறார் என்று பழைய போட்டோவையும் புதிய போட்டோ உடன் கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications