படங்களில் பிஸினு சொன்ன வேல ராமமூர்த்தி! எதிர்நீச்சலில் கமிட்டானது எப்படி? ஒரு நாள் ஊதியம் இவ்வளவா?
சென்னை: ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் வேல ராமமூர்த்திக்கு டபுள் சம்பளம் வழங்கப்படுகிறதாம்.
எதிர்நீச்சல் சீரியல்- ஆதி குணசேகரனாக மிரட்டிய, சிரிக்க வைத்த, கோபப்படுத்திய, சிந்திக்க வைத்த நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவை மறக்க முடியுமா? எத்தனை நேர்த்தியான நடிப்பு!

எத்தனை புதுமைகளை புகுத்தி வசனத்தை பேசினார், அவருடைய முகம், உடல் என அனைத்துமே நடிக்கும்! இத்தனை ஆண்டுகளாக படங்களில் நடித்தும் இயக்கியும் வந்த மாரிமுத்துவுக்கு இந்த சீரியல்தான் புதிய வாழ்வை கொடுத்தது என சொல்லலாம்.
வில்லன் நடிகருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்தது என்றால் அது ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துவுக்குத்தான். சீரியலில் பெண்ணடிமைத்தனத்தை செய்யும் ஆதி குணசேகரனுக்கு எத்தனை பெண்கள் ரசிகைகளாக இருந்தனர் என்பது அவருடைய இறப்பின்போதுதான் தெரியவந்தது.
கடந்த மாதம் அவர் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத்தேரியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தையே தக்க வைத்துக் கொண்டிருந்தது.
இதற்கு காரணம் இதில் நடிக்கும் அனைத்து நடிகர், நடிகைகளுமே சிறப்பாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தினாலும் மாரிமுத்துவுக்காகவே நிறைய பேர் இந்த சீரியலை பார்த்தனர். இந்த நிலையில் அவரது இறப்பால், அடுத்த ஆதி குணசேகரனை தேர்வு செய்யும் பணியில் இயக்குநர் திருச்செல்வம் முனைப்பு காட்டி வந்தார். இதற்காக இளவரசு, வேல ராமமூர்த்தி, ராதாரவி உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக செய்திகள் வந்தன.
ஆனால் வில்லன் நடிகர் வேல ராமமூர்த்தி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிவிட்டதால் சீரியலில் தொடர்ந்து நடிக்க கால்ஷூட் கொடுக்க முடியுமா என்பது தெரியவில்லை என கூறியிருந்தார். எத்தனை நாளைக்குத்தான் ஆதி குணசேகரன் இல்லாமலேயே சீரியலை ஓட்டுவது என நினைத்த எதிர்நீச்சல் டீம், எப்படியாவது வேல ராமமூர்த்தியை பிடித்து போட பார்த்தது.
அந்த வகையில் இதில் சன் டிவி நிர்வாகம் தலையிட்டு ஆதி குணசேகரனாக நடிக்க மாரிமுத்து வாங்கிய சம்பளத்தை விட டபுள் மடங்கு சம்பளம் கொடுப்பதாக தெரிவித்தது. இதையடுத்து வேல ராமமூர்த்தி உடனே ஓகே சொல்லிவிட்டார். இதையடுத்து அவர் என்ட்ரி கொடுக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவுக்கு ஒரு நாளைக்கு ரூ 20 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. அந்த வகையில் டபுள் மடங்கு என்றால் வேல ராமமூர்த்திக்கு ரூ 40 ஆயிரம் வழங்கப்படும். வெறும் 20 நாட்கள் நடித்தாலே அவருக்கு ரூ 8 லட்சம் கிடைக்கும். சீரியலில் ஹீரோ, ஹீரோயின்களை விட மிக அதிக ஊதியம் வாங்கும் நபராக விளங்குகிறார் வேல ராமமூர்த்தி!
வேல ராமுமூர்த்தியும் சாதாரணமானவர் இல்லை. அவர் ஒரு எழுத்தாளர். நாவலாசிரியர், குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை போன்ற கதைகளை எழுதியுள்ளார். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்த கமுதியில் பெருநாழி என்ற ஊராட்சி ஆகும்.












Click it and Unblock the Notifications