பிக்பாஸ்6: இன்று குறும்படம் இருக்கு! கடைசியில் மாட்டியவருக்கு ஆப்பு, இன்று நடக்கப் போவது இதுதானாம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் சனிக்கிழமை குறும்படம் போட்டு காட்ட வேண்டும் என்று தனலட்சுமி கூறி வந்தார் .தற்போது அந்த நாள் வந்து விட்டதால் இன்று கண்டிப்பாக குறும்படம் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
புரியாதவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று இன்றைய முதல் ப்ரோமோவில் கமல் பேசியதை வைத்து இன்று குறும்படம் இருக்கு என்று ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் கடைசியில் குறும்படத்தில் மாட்டி இருப்பவர் தான் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளராம்.

தனலட்சுமி கூறிய விடாப்பிடியான வார்த்தை
பிக் பாஸ் சீசன் சிக்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வாரமாக இருந்து வருகிறது. காரணம் கடந்த நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்கில் எதிர்பாராதவிதமான பல சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது. அதில் ஷெரினா மற்றும் சக போட்டியாளர்களை தனலட்சுமி தான் தள்ளிவிட்டுவிட்டார் என்று அசீம் தனலட்சுமி மீது குற்றச்சாட்டினை வைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனலட்சுமி தள்ளியதை நான் என் கண்களால் பார்த்தேன் என்று வேற கூறி இருக்கிறார் .ஆனால் தான் அப்படி செய்யவே இல்லை. இந்த வாரம் கமல் இதற்கு பதில் சொல்வார் .குறும்படம் போட சொல்லி நான் கேட்பேன் என்று ஆணித்தரமாக கூறி வந்தார்.

அசீமுக்கு எதிராக ரசிகர்கள் கருத்து
தனலட்சுமி சொல்வது தான் உண்மை தனலட்சுமியின் மீது தப்பில்லை என்று ரசிகர்கள் பலரும் அந்த வீடியோ கிளிப்புகளை குறும்படங்களாக வெளியிட்டு வந்தனர். அதில் ஷெரினா அடிபடாமலே அடிபட்டதாக ஓவர் ஆக்டிங் செய்து வந்ததாகவும், தனலட்சுமி எந்த தவறும் செய்யவில்லை என்பதும் அதில் இருந்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர் .இந்த நிலையில் இன்று கமல் தனலட்சுமிக்கு சரியான நீதி வழங்க வேண்டும் என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அதுபோல அசீம் தொடர்ந்து செய்து வரும் ஆப்டிடியூட்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

நடக்கப் போவது இதுதானாம்
இந்த நிலையில் இன்று கமல் அசீமை வறுத்தெடுக்கப் போகிறாராம், கடந்த வாரம் இவருக்கு கொடுத்த வாய்ப்பை இந்த வாரம் கெடுத்துக் கொண்டதை நினைவுபடுத்தி இவருக்கு இந்த வாரம் பஞ்சாயத்து இருக்கிறதாம். அதுபோல ஷெரினாவிற்கு குறும்படம் வெளியிட்டு அவருடைய நடிப்பிற்கு நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கப் போகிறாராம். அடுத்ததாக அசல் டேஞ்சர் நிலையில் இருப்பதை குறித்து இன்று பேசப்போகிறாராம். அது மட்டும் அல்லாமல் தனலட்சுமி மீது இருக்கும் பழியை நீக்கி விட்டு அவரை பாராட்ட போகிறாராம். என்ன தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலவரமாக இருந்தாலும் சக போட்டியாளர்கள் இவர்தான் இந்த வீட்டின் ஒஸ்ட் பெர்ஃபார்மர் என்று குறை கூறினாலும் ஷிவினுக்கு இன்று பாராட்டு மழை பொழிய போகிறதாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்
பல போட்டியாளர்கள் பிரச்சனையை த தட்டி கேட்பதற்கு முன்வராமல் ஒளிந்து கொண்டிருந்த நேரத்தில் ஷிவின் கணேஷ் ஒவ்வொரு இடத்திலும் தன்னுடைய கருத்தினை தைரியமாக முன் வைத்ததை பாராட்டி இன்று கமல் பேசப் போகிறாராம். அது மட்டுமல்லாமல் ஷிவின் தன்னுடைய தங்கை என்பது போல இன்றைய எபிசோடு இருக்கப் போகிறது என்று இப்போதே ரசிகர்கள் பலர் கருத்து கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும், ரசிகர்கள் எதிர்பார்த்தது இன்று நடக்கப் போகிறதா? அல்லது கமல் இவர்கள் எல்லா கருத்தையும் தூக்கி விட்டு கடந்த வாரம் போல இந்த வாரமும் மக்கள் உங்களை காப்பாற்றி விட்டார் அதனால் நீங்கள் செய்தது அவர்களுக்கு பிடித்து விட்டது என்று அசீமுக்கு பட்டும் படாமல் அறிவுரையை கூறி முடிக்க போகிறாரா? என்று என சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications