அக்காவை காதலிக்கறேன்னு சொன்னதும் தங்கச்சி மயக்கமாயிட்டாளே...ராம்கி நிலைமை?
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் பவுர்ணமியை காதலிக்கறேன்னு, தங்கச்சி பவானிகிட்டே ராம்கி சொல்ல, தங்கச்சி உடனே மயக்கம் போட்டு விழுந்துடறா.
பவுர்ணமி பிறந்ததிலிருந்து அவளை அவங்க அப்பாவுக்கு பிடிக்காது. ரெண்டாம் தாரத்துக்கு பிறந்த பவானியைத்தான் பிடிக்கும்.
பவானி மட்டும்தான் தன் மகள்னு எப்போதும் சொல்லிக்கிட்டு இருப்பவர் அப்பா சக்ரவர்த்தி. உங்க பொண்ணுக்கு லவ் லெட்டர்னு ராம்கி சிஷ்ய பையன் குடுக்க, சக்ரவர்த்தி பவானிக்குத்தான்னு அவகிட்ட குடுத்துடறார்.

சிக்கல்
பவானிக்கு ராம்கியை பிடிக்கும், அவள் அவனை காதலிச்சுக்கிட்டு இருக்கறதுனால தனக்குத்தான் லவ் லெட்டர் கொடுத்திருக்கான்னு அவளும் நினைக்கறா. அப்பாவும் காதலுக்கு பச்சைக் கொடிக் காட்ட பாவம் ராம்கி காதலுக்கு சிக்கல் வந்துருது.

அப்பா அம்மா
ராம்கி அப்பா அம்மாவும் சக்ரவர்த்திக்கிட்டே போயி பொண்ணு கேட்டுடறாங்க. ரெண்டு பேரும் காதலிக்கறாங்கன்னு தெரிஞ்சதும் சக்ரவர்த்தியும் சம்மதம் சொல்லிடறார்.

தவிப்பில் ராம்கி
இப்படி ஆகிருச்சே..இனியும் சும்மா இருக்க கூடாதுன்னு,பவானியைப் பார்த்து பேச போறான் ராம்கி. அவள் லவ் பத்தியே பேச, அய்யோ கொஞ்சம் நிறுத்தறீங்களான்னு கத்தறான்.

பவுர்ணமியை காதலிக்கிறேன்
நான் உங்க அக்கா பவுர்ணமியைத்தான் காதலிக்கறேன்னு சொல்றான். சொல்லிட்டு திரும்பிப் பார்த்தா பவானி மயங்கிட்டா. தூக்கிகிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடறான்

துடிக்கறார்
துடிச்சு போறார் சக்ரவர்த்தி. என்னாச்சு டாக்டர்னு கேட்க...பொண்ணுக்கு லோ பிபி இருக்கு சார். அதிர்ச்சியான விஷயம் ஏதும் சொன்னீங்களான்னு கேட்கறார் டாக்டர். இல்லையே.. ராம்கி நீ ஏதும் சொன்னியான்னு கேட்கறார்.
பயந்து போய் நிக்கறான் ராம்கி... பாவம் இவன் எப்படி பவுர்ணமிகிட்ட லவ்வை சொல்லப்போறானோ தெரியலையே...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications