ஷூட்டிங் சமயத்தில் தனியாக உட்கார்ந்து விஜய் என்ன யோசிப்பார்?
சென்னை: தளபதி விஜயின் புலி படம் வெளியான போது சன் டிவி கண்ட நேர்காணலை மறு ஒளிபரப்பு செய்தது சன் டிவி. அப்போது இயக்குநர் முருகதாஸ் விஜயிடம் ஷூட்டிங் சமயத்தில் தனியாக உட்கார்ந்து என்ன யோசிப்பீர்கள் என்று ஒரு கேள்வி கேட்டார்.
விஜய் நடிப்பில் வெளியான புலி படம் சமயத்தில், சன் டிவி நடிகர் விஜயை சிறப்பு நேர்காணல் செய்து, அதை ஒளிபரப்பியது. அப்போது இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் திரையில் தோன்றி கேள்வி கேட்டனர்.
அப்போதுதான் முருகதாஸ் ஷூட்டிங் சமயத்தில் விஜய் தனியாக உட்கார்ந்து என்ன யோசிப்பார் என்று அவரிடம் கேட்க வேண்டும் என்று கேட்டார்.

ஒரு நாற்காலியில்
ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும்போது, விஜய் சார் ஷாட் முடிந்ததும், மக்களிடம் இருந்து விலகி வெறும் சுவற்றையோ அல்லது வெற்றிடத்தையோ வெறித்து பார்த்து அமர்ந்திருப்பார். நான் புலி பட ஷூட்டிங் சமயத்தில் பார்த்து இருக்கேன்.

என்ன யோசிப்பார்
அப்போது அப்படி மக்களில் இருந்து விலகி என்ன யோசிப்பார் என்று அவரிடமே கேட்டு இருக்கேன். அப்போது அவர் பதில் சொல்லவில்லை. இப்போது சன் டிவி வாயிலாக கேட்கிறேன் என்று சொன்னார். அப்போது சிரித்த விஜய், ஒண்ணும் இருக்காது.. தூங்கிகிட்டு இருந்திருப்பேன்.. இல்லை இந்த பாட்டு அல்லது ஃபைட் ஷூட்டிங் எப்போ முடியும்னு யோசிச்சுகிட்டு இருந்து இருப்பேன் என்று சிரித்தார்.

உண்மையில் என்ன
உண்மையில் என்ன யோசித்து கொண்டு இருப்பீர்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டபோது, கடைக் கோடியில் இருக்கும் சகோதரர் சகோதரிகளுக்கு.. அம்மா அப்பாக்களுக்கு என்ன நல்லது செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்திருப்பேன் என்று கூறினார்.

டான்ஸ் ஃபைட் காமெடி
நடிகர் ஜெயம் ரவி திரையில் தோன்றி, டான்ஸ், ஃபைட் என்று இப்படியான சூழலிலும் காமெடி சேர்த்து நன்றாக நடிக்கிறீர்களே.. அது எப்படி அண்ணா என்று கேட்டார். அப்போது பேசிய விஜய், நான் கவுண்டமணி, செந்தில் இவங்களோட ரசிகன். இவங்க காமெடி எனக்குள்ளும், என் நண்பர்களுக்குள்ளும் ஊறிப்போன ஒன்று. சில சமயம் நண்பர்களுடன் பேசும்போது, இவை வெளிப்படும். இதெல்லாம் இன்ஸ்பிரேஷனாக வச்சுத்தான் நான் டான்ஸ், ஃபைட் இவைகளில் காமெடி சேர்த்து நடிக்கிறேன் என்று சொன்னார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications