ஆஹா ஜனனி வீட்டுக்கு வர மாயாவுக்கு சாம்பிராணி... எது சொன்னாலும் நம்புறாய்ங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் இத்தனை நாள் பார்ப்பவர்கள் மனதை கலங்கடிச்சுது. காரணம் புதுசா கல்யாணம் ஆன ஜனனியையும், சந்தோஷையும் மூத்த மருமக பிரிச்சு வச்சிருந்ததுதான்.

ரகசியமா ஜனனியும், சந்தோஷும் டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணி இருந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் ரொம்பவே மிஸ் பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க.

வீட்டில் ஜனனி இல்லாம ஒரு வேலையும் நடக்கலை. மாயாவும், அவ தங்கச்சியும் சமைக்கறது கூட இல்லை. மாமனார் உடம்பு சரியில்லாம போவதும் ஜனனி ஜாதகம்தான் காரணம்.. அதனால, ஜனனி அவங்க அப்பா வீட்டுக்கு போகட்டும்னு சொல்லிட்டறாங்க மாயா.

மாமாவின் உடல்நிலை

மாமாவின் உடல்நிலை

மறுபடியும் மாமாவின் உடல்நிலை சரியில்லாம போக, அப்பா மாத்திரை சாப்பிட்டீங்களாப்பான்னு சந்தோஷ் கேட்கறான்.. இல்லப்பா.. ஜனனி இருந்த வரைக்கும் நல்ல சாப்பாடு, சரியான நேரத்துக்கு மாத்திரைன்னு கொடுத்துக்கிட்டு இருந்தா. அவ இல்லாம என்னால இன்னும் ஷெட்யூல் பண்ண முடியலைப்பான்னு அப்பா சொல்றார்.

நண்பன்

நண்பன்

சந்தோஷின் நண்பன் வீட்டுக்கு வர்றான்.. ஜனனியை அழைச்சுக்கிட்டு வந்துடுடான்னு பேசிகிட்டு இருக்க, மாயா வந்து என்ன சந்தோஷ் ஜனனி பேர் அடிபடுதுன்னு கேட்கறாங்க. இல்ல அண்ணி, ஜனனி ஜாதகம் சரியில்லாததுனால சந்தோஷ் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போவுதுன்னு சொல்றீங்க. அப்போ சந்தோஷ் காலம் பூரா தனியாவே வாழணுமா.. அவன் கதி என்ன?

இன்னொரு கல்யாணம்

இன்னொரு கல்யாணம்

நீங்க சொல்றபடி பார்த்தா சந்தோஷுக்கு வேற கல்யாணம் பண்ணி வைங்க.. அவன் வாழ்க்கை வீணா போகுதுல்லேன்னு சொல்றான். மாயா, சரி யோசிச்சு சொல்றேன்பான்னு சொல்லிட்டு போறாங்க. பார்த்தியா சந்தோஷ்.. என்ன சொன்னாலும் நம்புறாய்ங்கப்பா...சீரியஸா உனக்கு வேற கல்யாணம் செய்துட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சு ஜனனியை அழைச்சுட்டு வரலாம்னு சொல்லுவாங்க பாருன்னு சொல்றான்...

நோ கல்யாணம்

நோ கல்யாணம்

சந்தோஷுக்கு வேற கல்யாணமா, நோ.. அவ ஜனனி மாதிரி நம்ம பேச்சை கேட்டுகிட்டு, கைக்குள்ள இருப்பான்னு சொல்ல முடியாது. அதுவும் இல்லாம ஜனனிக்கு குழந்தை பொறுக்காது. புதுசா வர்றவளுக்கு குழந்தை பொறந்துச்சுன்னா நமக்குத்தான் ஆபத்துன்னு தங்கச்சி கூட டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு, ஜனனியை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடலாம் மாமா.. ஏதாவது பரிகாரம் பண்ணிக்கலாம்னு சொல்றா.. அப்படி வாங்க வழிக்குன்னு சிரிக்கறான் நண்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+