பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆடிஷன் தொடங்கியாச்சு! டிடிஎஃப் வாசன் முதல் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் விரைவில் 8வது சீசன் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான ஆடிஷன் நடைபெற்று இருப்பதாக செய்திகள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் அதில் இரண்டு போட்டியாளர்கள் கலந்து கொள்ளப் போவதாக அவர்களுடைய பெயர் லீக் ஆகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் போன விஜய் டிவியில் பல புதிய புதியதாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். முதல் சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே இது என்ன ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாக இருக்கிறது? எப்படி பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டிற்குள் எந்த இணைய வசதியும் இல்லாமல் இருக்கப் போகிறார்கள் என்ற கேள்விகள் பலருக்கும் இருந்தது.

ஒரு பக்கம் நமக்கு தெரிந்த பிரபலங்கள் தினமும் என்னதான் பேசிக் கொள்கிறார்கள்? என்னதான் செய்கிறார்கள்? என்று பார்ப்போமே என்று ஒரு சிலர் அந்த நிகழ்ச்சி பார்க்கத் தொடங்கினார்கள். ஒரு வழியாக சேனல் எதிர்பார்த்தபடியே முதல் சீசன் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சர்ச்சைகள் நிறைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனும் பெரிய அளவில் விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறது.
அதிலும் கடந்த இரண்டு சீசன்களின் டைட்டில் வின்னர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ஆனாலும் எட்டாவது சீசன் எப்போது தொடங்கப்படும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. அதோடு இந்த சீசனிலும் கமல்தான் தொகுப்பாளராக இருக்கப் போகிறாரா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கடந்த சீசனில் கமல் மாயா மற்றும் பூர்ணிமா கேங்கிற்க்கு ஆதரவாக பேசினார் என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருந்தது.
அதனால் இந்த சீசனில் இனி என்ன நடக்கப்போகிறது என்று கேள்விகள் எல்லோருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான ஆடிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். வழக்கம்போல இந்த முறையும் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இப்போதைக்கு பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வழக்கம் போல பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவர்களையும் அதிகமாக இறக்க முயற்சி செய்திருக்கிறார்களாம்.
அதிலும் இந்த சீசனில் டிடிஎஃப் வாசன் மற்றும் அவருடைய காதலி ஷாலினி ஜோயாவும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஷாலினி ஜோயா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதனால் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அவரும் முக்கிய போட்டியாளராக இருக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வமாக இதை விஜய் டிவி இன்னும் அறிவிக்கப்படவில்லை அதனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஒவ்வொரு சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பும் உத்தேச பட்டியல் வெளியாவது வழக்கம் தான். ஆனால் அதில் அதிகமாக கணிக்கப்படும் பிரபலங்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் இருக்கிறார்கள். இந்த முறை என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications