தலித் அமைச்சர்கள் எதுவும் பண்ணலன்னு கேட்கிறாரே! பா ரஞ்சித் என்ன பண்ணுனாரு? கூல் சுரேஷ் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் பா ரஞ்சித் தலித் அமைச்சர்கள் பற்றி பேசிய வீடியோ சில நாட்களாக சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வந்தது. அரசியல் வட்டாரத்திலும் விவாதமாக மாறியது. அதற்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் கொடுத்து இருந்த நிலையில் தற்போது நடிகர் கூல் சுரேஷ் அந்த விவாகரத்தை பற்றி பேசியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பா ரஞ்சித் பேட்டி

அதாவது சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பா ரஞ்சித் தற்போதைய அமைச்சரவையில் தலித் சமூகத்தை சேர்ந்த 7,8 அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தலித் மக்களுக்காக என்ன செய்தார்கள்? ராஜ்மோகன் அமைச்சர் ஆன பிறகுதான் அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்றே பலருக்கும் தெரிந்தது. ஆனால் அவர் தலித் மக்களுக்காக ஆரம்பத்தில் இருந்தே என்ன பண்ணுனாரு?

ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த போது மட்டும் சில வீடியோக்கள் வெளியிட்டார். அதற்கு பிறகு தலித் மக்களுக்கு பல பிரச்சனைகள் நடந்தும் அது பற்றி குரல் கொடுக்கவே இல்லை என்று விமர்சித்து இருந்தார். இந்த பேச்சு சோசியல் மீடியாவில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

Pa Ranjith Cool Suresh Rajmohan

அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

அதில் பா ரஞ்சித் பேசியதை பார்த்தேன். ஆனால் இது ஒரு சமூகத்துக்கான அரசு இல்ல, எல்லா மக்களுக்குமான அரசு. யாருக்காக என்ன செய்தோம் என்பதை வார்த்தைகளால் நிரூபிக்க விரும்பவில்லை செயலில் காட்டுவோம் என்று அமைதியாக பதில் கொடுத்து இருந்தார். இந்த விளக்கமும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில் தான் இப்போது இந்த விஷயத்தில் கூல் சுரேஷ் களம் இறங்கி இருக்கிறார்.

நடிகர் கூல் சுரேஷ் கேள்வி

அவர் ஏற்கனவே பல திரைப்படங்களில், ப்ரொமோஷனின்போது ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாலும் இப்போது அரசியல் சம்பந்தமாக பேசியிருப்பதும் கவனம் பெற்று வருகிறது. அதில் அவர் பேசும்போது, பா ரஞ்சித் சார் இன்னைக்கு 7,8 தலித் அமைச்சர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தலித் மக்களுக்காக என்ன பண்ணுனாங்க? என்று கேட்கிறார்.

முதலில் பா ரஞ்சித் இதுவரைக்கும் யாருக்கு என்ன பண்ணி இருக்கிறார்? அவர் வீடு தாண்டி 4வது வீட்டில் தான் நான் இருக்கிறேன். எத்தனை தடவை உங்க வீட்டுக்கு முன்னாடி, ஆபீஸ் முன்னாடியும் வாய்ப்புக்காக நின்னு இருப்பேன். ஒரு வாய்ப்பு கொடுங்கனு எத்தனை தடவை கெஞ்சி இருப்பேன். ஆனா ஒரு சின்ன வாய்ப்பாவது கொடுத்திங்களா சார்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் அமைச்சர் ராஜ்மோகன் தலித் மக்களுக்கு என்ன பண்ணுனாருன்னு கேக்குறீங்க அவங்க ஆட்சிக்கு வந்து ரெண்டு மாசம் தான் ஆகுது, அவர் உங்களில் ஒருத்தன் தானே தேர்தல் நேரத்தில் அவருக்காக போய் ஓட்டு சேகரிசிங்களா? இப்ப மட்டும் தலித் தலித் என்று பேசுறீங்க. முதலில் நீங்க தலித் மக்களுக்கு என்ன பண்ணுனீங்கன்னு சொல்லுங்க சார் என்று சொல்லி இருக்கிறார். இது இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து பா ரஞ்சித் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+