வனிதாவுக்கு 4வது கல்யாணம்? பீச்சில் முட்டி போட்டு சொல்லும் காதல்.. மாப்ளை இவரா? தலையே சுத்துது போங்க
சென்னை: நடிகை வனிதாவுக்கு மறுபடியும் கல்யாணமா? என்று இணையவாசிகள் தலையை பிய்த்து கொண்டிருக்கிறார்கள்.. இது தொடர்பாக போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் உலா வரவும், அதற்கு மேல் குழம்பிபோய் கிடக்கிறார்கள்.. என்னதான் நடக்கிறது?
வனிதா விஜயகுமார், சீரியலில் நடித்த ஆகாஷ் என்பவரை, கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.. அவர் மூலம் விஜய ஹரி மற்றும் ஜோவிதா என்கிற 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். பிறகு தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2007ம் ஆண்டு ஆகாஷை விட்டு பிரிந்தார் வனிதா.
கணவர் : முதல் கணவரை விவாகரத்து செய்த சில மாதங்களிலேயே, ஆனந்த் ஜெயராஜன் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார் வனிதா.. இவர் மூலம் ஜெயனித்தா என்கிற மகள் வனிதாவுக்கு பிறந்தார். பிறகு, 2012ம் ஆண்டு ஆனந்த ஜெயராஜனையும் விவாகரத்து செய்தார்.. சினிமாவில் பிஸியானார்.. அவரே தயாரிப்பாளராகவும் மாறினார்..

அந்த நேரத்தில்தான், "எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்" என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தயாரித்து, ஹீரோவாகவும் நடித்திருந்தார். ராபர்ட் - வனிதா இந்த படத்தில் ஜோடியாக நடித்தனர்.. இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது, ராபர்ட்டும், வனிதாவும் காதலிப்பதாக செய்திகள் கசிந்தன.. வனிதாவின் பெயரை ராபர்ட் பச்சை குத்தியதாக கூறப்பட்டது அதற்கு மேல் சர்ச்சையை கிளப்பியது.
புரமோஷன்: ஆனால், படத்தின் புரமோஷனுக்காகவே இப்படியெல்லாம் செய்திகள் வெளிவந்ததாக ராபர்ட் தரப்பில் சொல்லப்பட்டது. அந்த படம் மண்ணை கவ்வினாலும், வனிதா - ராபர்ட் ஜோடியின் காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இதற்கு பிறகுதான், பீட்டர் பால் என்பவருடன் பழகி, அவரை காதலித்து, 2020ல் திருமணமும் செய்தார்.. ஆனால், பீட்டர் பாலை விட்டு, வனிதா விஜயகுமார் 3 மாதத்திலேயே பிரிந்துவிட்டார்.. இப்போதும்கூட வனிதா பிசியாக நடித்து வருகிறார்.. சொந்தமாக யூடியூப் சேனல், சினிமா படங்கள், நிகழ்ச்சிகள், விழாக்கள் என படுபிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில், வனிதாவுக்கு 4வது கல்யாணமா? என்று கேட்டு செய்திகள் மீடியாக்களை வலம்வந்து கொண்டிருக்கின்றன.. இது தொடர்பாக ஒரு போட்டோவும் வெளியாகியிருக்கிறது..

பிகினி உடை: அதாவது "எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்" படத்தில் நடித்தபோது, ராபர்ட் மாஸ்டருக்கு புரபோஸ் செய்துள்ளார் வனிதா.. பீச்சில், அதுவும் பிகினி உடையில் முட்டி போட்டு, இரு கைகளையும் நீட்டி புரபோஸ் செய்துள்ளார்... இந்த போட்டோதான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.. இதுகுறித்து வரும் அக்டோபர் 5-ம் தேதி முக்கிய தகவல் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்த உண்மைத்தன்மை தெரியவில்லை.. சமீபத்தில் ராபர்ட் - வனிதா விஜயகுமார் இருவரும் இணைந்து, ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த படம் சம்மந்தமான அறிவிப்புக்காக தான், இப்படி வித்தியாசமான புரோமோஷன் பாணியை படக்குழுவினர் கையிலெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பவர் ஸ்டார்: இப்படித்தான் ஒருமுறை பவர் ஸ்டார் சீனிவாசனுடன், வனிதா, மாலையும் கழுத்துமாக நின்ற போட்டோ மிகப்பெரிய அளவில் வைரலானது.. வனிதா பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்து கொண்டாரோ என எல்லோருக்கும் சந்தேகமும் எழுந்தது. அதுமட்டுமல்ல, வனிதாவும் பவர் ஸடாரும் கன்னத்தோடு கன்னம் வைத்து சிரித்ததுபோல் இருக்கும் போட்டோவும் வெளியானது.
ஆனால், பவர் ஸ்டார் தயாரித்து நடிக்கும் பிக்கப் ட்ராப் என்ற படத்தில் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட போட்டோ என்று வனிதாவே விளக்கமளித்திருந்தார்.. அதுபோலவே, இப்போதும் ராபர்ட் மாஸ்டருக்கு புரபோஸ் செய்யும் போட்டோவும் வைரலாகி கொண்டிருக்கிறது.
என்ன அறிவிப்பு: சமீபத்தில், வனிதா விஜயகுமாரிடம் அடுத்த திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.. அதற்கு வனிதா, எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறியிருந்தார்.. எனினும், அக்டோபர் 5-ம் தேதி என்னதான் அறிவிப்பு வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
ஏற்கனவே இவர்கள் இணைந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியானதால், இது நிச்சயம் புது படத்தை பற்றின தகவலாக இருக்கும் அல்லது பாடல் காட்சியின் போட்டோவாக கூட இருக்கும் அல்லது மறுபடியும் புரொமோஷன் வேலையாக இருக்கும் என்று சோஷியல் மீடியாவில் கமெண்ட்கள் கிளம்பி வருகின்றன.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications