Sundari Neeyum Sundaran Naanum: பசிக்கறப்போ கிடைக்கும் சாப்பாடு எல்லாமே நல்ல சாப்பாடுதான்...!
சென்னை: விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு டீச்சர் தமிழ் சாப்பாடு எடுக்க வருகிறாள் என்று தெரிந்து விட்டது. அவளை பழி வாங்க வேலுவின் சித்தி சாப்பாட்டில் விஷம் கலந்துடறாங்க.
மயங்கி மயங்கி விழும் குழந்தைகளை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, தமிழ் பேசும் வசனம்தான் பசிக்கறப்போ கிடைக்கும் சாப்பாடு எல்லாமே நல்ல சாப்பாடுன்னு ஆசையா சாப்பிடற குழந்தைங்க அவங்க...
எது நடந்தாலும் என்ன.. ஏதுன்னு கூட கேட்க ஆளில்லாத குழந்தைங்க... என்னை பழிவாங்க அவங்க சாப்பாட்டில் எதுக்கு வேலு விஷத்தை கலக்கணும்னு புருஷன் வெலுவிடம் சொல்லி அழறா.

டைட்டில் சாங் இல்லை
விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் திங்கள் முதல் சனி வரை மதியம் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியின் எந்த சீரியலுக்கும் டைட்டில் சாங் இல்லை. சீரியல் ஆரம்பிக்கும்போதே போட வேண்டிய பெயர்களை போட்டுவிடுவார்கள். அப்படித்தான் இந்த சீரியலும் ஆரம்பிக்கும்.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் பாடலே இந்த சீரியலுக்கு டைட்டிலாக உள்ளதால், எப்போதாவது கமலின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் பாடலை டைட்டில் சாங் போல ஒளிபரப்புவார்கள். இந்த சீரியலுக்கு அந்த பாடல் ஒளிபரப்புவது என்பது பொருத்தமாகவும், ரசிக்கும்படியும் இருக்கிறது.

பாட்டி சொல்
வேலுவின் பாட்டியாக நடிகை லதா நடிக்கிறார். பாட்டியின் சொல்லைத் தட்டாதவனாக பேரன் வேலு இருக்கிறான். இவனுக்கு ஆசை ஆசையா தமிழை கல்யாணம் செய்து வைக்கறாங்க பாட்டி. தமிழ் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி பெற்று பள்ளி நடத்தி வருகிறாள். திருமணம் ஆன ஒரு சில மாதத்தில் தமிழ் தனக்கு எதிரி குடும்பத்தை சேர்ந்தவள் என்று பாட்டிக்குத் தெரிகிறது.

தமிழை வீட்டை விட்டு
தமிழை வீட்டை விட்டு வெளியில் போன்னு துரத்திடறாங்க பாட்டி. இதை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கறாங்க வேலுவின் சித்தி. சித்தி தனது பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்ய, அதில் தமிழும் கலந்துக்கொண்டால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்ட வேலு, கோயிலில் சாப்பாடு மீந்து போயிருக்கு உங்க பள்ளி குழந்தைகளுக்கு வந்து சாப்பாடு எடுத்துட்டு போங்கன்னு போனில் ஆளைவிட்டு சொல்ல வைக்கிறான்.

சித்தி தமிழ்
வேலுவின் சித்தி உடனே அதில் விஷம் கலந்துடறாங்க.. தமிழ் சாப்பாடு எடுத்துட்டு போயி அதை சாப்பிட்ட குழந்தைங்க மயங்கி விழுது. குழந்தைங்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு நிற்கும்போதுதான் தமிழ் இதை கேட்கிறாள்.. என்ன நடந்தாலும் கேட்க ஆளில்லாத குழந்தைகள்.. பசிக்கும்போது கிடைக்கும் எல்லா சாப்பாடு நல்ல சாப்பாடுன்னு நினைச்சு சாப்பிடற குழந்தைங்க.. என்னை பழி தீர்க்க உன் சித்தி இந்த ஆயுதத்தையா கையில் எடுக்கணும்னு கேட்டு அழறா.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications