டி.ஆர்.பியில் முதல் ஐந்து இடங்களை பெற்ற சீரியல்கள்..முதல் இரண்டு இடங்களில் எதிர்பார்க்காத சீரியல்கள்
சென்னை: வெள்ளித்திரையை விடவும் சின்னத்திரைக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் விரும்பி பார்க்கப்படும் சீரியல்களின் அடிப்படையில் டிஆர்பி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரத்தின் முதல் ஐந்து இடங்களை பெற்ற சீரியல்களின் விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சன் டிவி ,விஜய் டிவி சீரியல் போட்டி போட்டு இருக்கின்றது. ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இடத்தை பிடித்தது சன் டிவி சீரியலாக இருக்கிறது.

தொலைக்காட்சியின் ஆதிக்கம்
பொதுவாக பலரும் தங்களுடைய மனதை ரிலாக்ஸ் செய்வதற்காகவே வீட்டிற்கு வந்ததும் கையில் ரிமோட்டை எடுத்தபடி டிவியை தான் தேடி வருவார்கள் .ஆனால் இப்போது நிலைமை அப்படி அல்ல எங்கிருந்தாலும் கையில் இன்டர்நெட் வசதி இருப்பதால் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்கள். தொலைக்காட்சிகளில் ரசிகர்களை கவரும் விதமாக நாளுக்கு நாள் புதுவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதன் அடிப்படையில் டிஆர்பி நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சில சீரியல்களும், நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடும். சில சீரியல்கள் வந்த இடம் தெரியாமலே விரைவில் முடிக்கப்பட்டு விடுகிறது.

போட்டி போடும் சேனல்கள்
பொதுவாக சன் டிவி சீரியல்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம் தான் குறிப்பாக இரவு நேர சீரியல்கள் ரசிகர்களின் பலருடைய வீடுகளில் ஒலிக்கும் சங்கீதமாக இருந்து வருகிறது. சீரியலை வெறுக்கும் சிலர் கூட வீட்டில் இருக்கும் பலர் அதை விரும்பி பார்ப்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை என்பது போலத்தான் நடந்து கொள்ள முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் நடந்து சென்றாலே அங்கே ஒவ்வொரு வீட்டில் இருந்தும் சீரியல்களின் சத்தம் தான் வெளியே வேகமாக கேட்கும் அந்த அளவிற்கு பல வீடுகளில் சீரியல்கள் இடத்தைப் பிடித்து விடும் .அதிலும் அதிகமாக சன் டிவி சீரியல்கள் இருந்தது. ஆனால் தற்போது சன் டிவிக்கு இணையாக பல சேனல்கள் புதிதாக முளைத்திருக்கிறது.

முதல் இரண்டு இடங்களை பிடித்தவை
ஆனால் இந்த வாரம் டிஆர்பி யின் இடங்களை பார்க்கும் போது எத்தனை சேனல்கள் புதிதாக வந்திருந்தாலும் குறிப்பிட்ட ஒரு இடத்தை ரசிகர்கள் மதிப்பு கொடுத்து வைத்திருக்கின்றனர் என்பது தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த வார அடிப்படையில் முதல் இடத்தில் கயல் சீரியல் இருக்கிறது குடும்பத்திற்கு மூத்த மகளாக இருக்கும் கயல் செய்யும் தியாகங்களையும், உழைப்பையும் பாராட்டும் விதமாக இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த சீரியலின் டிஆர்பி 10.86 ஆக இருக்கிறது. அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியல் இருக்கிறது. புதியதாக தொடங்கி இருக்கும் இந்த சீரியல்10.85 பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த அளவிற்கு வெற்றிபெறும் என்பது யாரும் எதிர்பார்க்காததுதான் இந்த சீரியல் அனுப்பு தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தது குறுகிய காலத்தில் இந்த சீரியலுக்கும் பெரிய சாதனையை பெற்றிருக்கிறது.

ஐந்தாவது இடத்தில் விஜய் டிவி
மூன்றாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் 10.54 சதவிகிதம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே சுந்தரி சீரியலில் சுந்தரி பற்றிய உண்மைகள் அணுவுக்கு தெரிந்து விடுமா என்பது போன்ற விறுவிறுப்பான திருப்பங்கள் இந்த வாரத்தில் நடந்து வருவதால் இந்த சீரியலின் டிஆர்பியும் அதிகரித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து ரோஜா சீரியல் 9.51 பெற்று நான்காவது இடத்தில் வருகிறது. முதல் நான்கு இடங்களில் சன் டிவி சீரியல் இடத்தை பிடிக்க ஐந்தாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் 9 சதவிகிதம் பெற்றிருக்கிறது.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications