சீரியலில் நடிக்கும் ஜி பி முத்து! அதுவும் டாப் சீரியலில் தான்! சூட்டிங் போட்டோவை பகிர்ந்த பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜிபி முத்து முதல் ஆளாக வெளியேறிய நிலையில், தற்போது சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நடிகர்களோடு ஜிபி முத்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் சின்னத்திரை நடிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஜி பி முத்து தற்போது சின்னத்திரையும் விட்டு வைக்கவில்லையா? என்று ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

சாவின் விளிம்பு நிலையும் எட்டிப் பாத்தாச்சி
டிக் டாக் செயலி பலருடைய வாழ்க்கையை வேற லெவலில் மாற்றம் செய்து விட்டது. அந்த வரிசையில் ஒருவராக இருக்கும் ஜிபி முத்து தற்போது வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் டிக் டாக் செயலியில் தன்னுடைய முழு நேரத்தையும் செலவிட்டு, அதனால் வீட்டில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து தற்கொலை முயற்சியை எடுத்து சாவின் விளிம்பு நிலை வரை சென்று வந்த ஜி பி முத்து அந்த செயலி மூலமாக தனக்கு கிடைத்த ரசிகர்களை பெருக்கிக் கொண்டு யூடியூப் மூலமாக சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமான ஒரு நபராக இருந்து வருகிறார்.

முதல் நாளிலே அமோக வரவேற்பு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜிபி முத்துவின் காமெடிகளை ரசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு இருக்கும் ரசிகர்களின் பட்டாளத்தை பார்த்து பலர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்காக வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர் .அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் இவரை விட்டு வைக்காமல் இவருடைய ரசிகர்களை கவர்வதற்காகவே இந்த ஆறாவது சீசனில் அறிமுகப்படுத்தியது. முதல் போட்டியாளராக அறிமுகமானதும் இவருக்கு ஆகவே பலர் இந்த நிகழ்ச்சியை இனி பார்த்து விட வேண்டியதுதான் என்று ஹாட்ஸ்டார் எல்லாம் ரீசார்ஜ் செய்திருக்கிறார்களாம்.

சன்னி லியோனுடன் கொண்டாட்டம்
ஆறாவது சீசனில் அறிமுகமாகி இருக்கிறார் என்றதும் அவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்ற ரசிகர்களின் நம்பிக்கையை ஏமாற்றிவிட்டு, தன்னுடைய மகனின் மீது இருக்கும் பாசத்தின் காரணமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஜிபி முத்து ,வெளியே வந்த பிறகும் இதுவெல்லாம் எனக்கு ஒரு பெரியதே கிடையாது என்றும் சொல்கின்ற மாதிரி தான் சமூக வலைத்தளத்தில் இவருடைய செயல்பாடு இருந்து வருகிறது. வழக்கம்போல வீடியோக்களை வெளியிட்டு வரும் ஜி பி முத்து சன்னி லியோனுடன் இசை வெளியீட்டு விழாவில் அடித்த ஆட்டத்தால் மீண்டும் இவர் சமூகவலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

சீரியலையும் விட்டு வைக்கலையாம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஜிபி முத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் அணியினருடன் போட்டோஸ் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் இவர் இந்த சீரியலில் நடிக்க இருக்கிறாரா? என்று ஆர்வத்துடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சீரியலில் ஜிபி முத்து அறிமுகம் ஆகிறாரா? அல்லது சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த இடத்தில் நடிகர்களுடன் போட்டோ எடுத்தாரா? என்பது பற்றி இன்னும் அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இவர் இந்த சீரியலில் வந்தால் நன்றாக இருக்குமே என்று பலர் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications