குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்கள் இவங்க தானா? லீக்கான லிஸ்ட்.. அப்போ சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க இருக்கிறது என்ற தகவல்கள் இப்போது இணையத்தில் பரவி வருகிறது. சமீபத்தில் தான் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து இருந்தது. அதை தொடர்ந்து ஐந்தாவது சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என்று செய்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு வழக்கம் போல மக்களிடம் இருக்கும் நிலையில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற உத்தேச பட்டியல் இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் யாருடைய பெயர் எல்லாம் இடம் பெற்றிருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவி நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோவுக்கு என்று ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. அதுபோல ஒரு சில நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

விரைவில் ஐந்தாவது சீசன்: ஒவ்வொரு வருடமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதும், அது முடிவடைந்ததும், மறுபடியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்குவதுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நடுவர்கள்: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை ரக்சன், விஜே மணிமேகலை போன்றோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். அதுபோல ஒரு சில கோமாளிகள் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து வருகிறார்கள். குக்குகள் மட்டும்தான் ஒவ்வொரு சீசனிலும் மாறிக் கொண்டிருக்கின்றனர்.

உத்தேச பட்டியல்: அந்த வரிசையில் விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களிடம் சேனல் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அந்த வகையில் ஒரு சில பிரபலங்களின் பெயர் இந்த சீசனில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அதில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் இந்த சீசனில் நடிகை வடிவுக்கரசி, குக்காக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசன் குக்குகள்: அதை தொடர்ந்து நடிகையாகவும் டப்பிங் கஞைராகவும் இருக்கும் தீபா வெங்கட் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல சமீபத்தில் திருமணம் முடிந்த நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி இந்த சீசனில் குக்காக கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாளவிகா மேனன். அதுபோல பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பலருடைய மனம் கவர்ந்த விஷ்ணு, அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா அவரும் இந்த சீசனில் கலந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

டான்ஸ் மாஸ்டர் மகள்: அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகளான அக்ஷதா அவங்களும் இந்த சீசனில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அபிசியல் ஆன அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ஆனால் இணையத்தில் இப்போது இவர்களுடைய பெயர் தான் அதிகமாக அடிபடுகிறது. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications