இதையெல்லாம் சாப்பிடாதீங்க.. ரசிகர் கொடுத்த அட்வைஸ்.. கோபத்தில் சிவாங்கி வெளியிட்ட பதிவு
சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த சிவாங்கி சமீபத்தில் தனக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த அட்வைஸுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரியாக்ட் செய்திருப்பது தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. தன்னை பற்றி எவ்வளவோ நெகட்டிவ் கமாண்டுகள் வந்தாலும் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாத சிவாங்கி இப்போது ரசிகர் தனக்காக கொடுத்த அட்வைசுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுத்திருக்கிறாரே என்பது பலருடைய கேள்விகளாகவும் இருக்கிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பலர் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையில் நடிகையாகவும் பாடகியாகவும் மாறி இருக்கும் சிவாங்கி ஆரம்பத்தில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட்டு பாட போட்டியாளராக அறிமுகம் ஆகி இருந்தார். ஆனால் அதில் அவர் எதிர்பார்க்காத வகையில் வெளியேற்றப்பட்டிருந்தார்.

பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக மக்கள் மனதை பிடித்து விட்டார். அதுபோல கடந்த சீசனில் குக்காகவும் கலக்கி இருந்தார். இப்படியான நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அது எதற்காகனா சில நாட்களுக்கு முன்பு ஷிவாங்கி விதவிதமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி ஒரு வீடியோ ஒன்று போஸ்ட் போட்டு இருக்கிறார்.
அதற்கு சிவாங்கிக்கு பிரைவேட்டாக மெசேஜ் செய்த ஒரு ரசிகர் நீங்க இப்படி ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிடாதீங்க. ஐஸ்கிரீம் சாப்பிட்டா உங்களுடைய குரல் வளம் போய்விடும். நீங்க நான்வெஜ் சாப்பிட மாட்டீங்கனு எங்களுக்கு தெரியும். அதுபோல இதையும் விட்டுடுங்க. நீங்கள் பாடகி சித்ரா அம்மா, சுஜாதா போன்று கட்டுப்பாடாக இருந்து உங்களுடைய திறமையை வளர்த்துக்கோங்க என்று அறிவுரை கொடுத்து இருக்கிறார்.
இதற்கு சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் எதை சாப்பிட வேண்டும் சாப்பிடக்கூடாது என்று எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம். எனக்கு எது பிடிக்கிறது அதைத்தான் நான் சாப்பிட முடியும். உங்களுக்காக நான் வாழ முடியாது. அதுபோல ஐஸ்கிரீம் சாப்பிட்டால் குரல் வளம் போய்விடும் என்பதெல்லாம் பொய். அதை நம்பி இன்னமும் எல்லோருக்கும் இதே அட்வைஸை செய்து கொண்டு இருக்காதீர்கள்.
அதுபோல சித்ரா அம்மா, சுஜாதா போன்றவர்களோடு நான் என்னை எப்போதும் கம்பர் பண்ணி கொண்டது கிடையாது. அதனால் அவர்களை பாலோ பண்ண வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
ஏற்கனவே சிவாங்கி பேசும்போது குழந்தை போல இருக்கிறது என்றும் அவர் பாடும் போது அவருடைய குரல் வித்தியாசமாக இருக்கிறது என்றும் பலர் கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சிவாங்கி இப்போது தனக்கு அட்வைஸ் செய்ததை மட்டும் இவ்வளவு சீரியஸாக எடுத்து ரியாக்ட் பண்ணி இருக்கிறாரே என்று பலரும் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications