யாருக்குத்தான் துரோகம் நடக்கல? இமான் சொன்ன ஒரே வார்த்தை! மீண்டும் கிளம்பிய சிவகார்த்திகேயன் சர்ச்சை
சென்னை: இசையமைப்பாளர் டி. இமான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் அதிகம் கவனம் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம் சில வருஷத்துக்கு முன்பு அவர் கொடுத்த ஒரு பேட்டி தான். எனக்கு மிகப்பெரிய துரோகம் நடந்திருக்கிறது, அதை செய்தது சிவகார்த்திகேயன் என்று இமான் கூறியிருந்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இப்போது மீண்டும் அவர் துரோகம் பற்றி பேசியது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இமான் பேட்டி
இமான் சில வருஷத்துக்கு முன்பு பேசிய சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் இப்போது நிறம் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களிடம் பேசும் போது துரோகம் பற்றி மீண்டும் இமான் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது நிறம் படத்தில் உருவான துரோகம் பாடல் பற்றிய கேள்விக்கு இமான், வாழ்க்கையில் யாருக்கு தான் துரோகம் நடக்காமல் இருக்கிறது? அது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் நடக்கக்கூடிய விஷயம் தான். இந்த படத்தில் பா. விஜய் எழுதியுள்ள துரோகம் பற்றிய பாடல் எல்லோருடைய வாழ்க்கையில் பொருந்தும் என்று நினைக்கிறேன் என்று கூறி இருந்தார்.

துரோகம் பற்றி விளக்கம்
அதோடு எனக்கு நடந்த துரோகம் பலருக்கு தெரியும். அதுவும் இந்த படத்தின் இயக்குநர், நடிகர்கள் பலருக்கும் தெரிந்ததால் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர்களுடைய வாழ்க்கையிலும் நடந்த துரோகத்தை பற்றி சொன்னார்கள். அதை எல்லாம் இந்த பாடலில் கனெக்ட் ஆகுகிறது. அதனால் இந்த பாடல் சக்சஸ் ஆகும் என்று இமான் பேசியிருந்தார்.
தேசிய விருது பெருமை
மேலும் தேசிய விருதுகள் குறித்து அவர் பேசும் போது, தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு கலைஞருக்கு தேசிய விருது கிடைக்கிறது என்றால் அதை ஒட்டுமொத்த தமிழர்களின் வெற்றியாக பார்க்க வேண்டும். எந்த படத்திற்கு கிடைத்தது? எந்த படத்திற்க்கு கிடைக்கவில்லை என்ற விவாதத்தை தாண்டி நம் மாநிலத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
தேசிய விருதை பற்றி அவர் பேசியது ஒரு பக்கம் இருந்தாலும் துரோகத்தை பற்றி மீண்டும் இமான் பேசியிருப்பதால் அவரின் பழைய பேட்டி இப்போ வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் பேசும்போது, சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். அது மிகவும் தனிப்பட்ட விஷயம். குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அதை வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த ஜென்மத்தில் அவருடன் மீண்டும் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று சொல்லி இருந்தார்.

பழைய பேட்டி
ஆனால் என்ன நடந்தது என்பதை பற்றி அவர் விளக்கம் கொடுக்கவில்லை. அது போல இது குறித்து சிவகார்த்திகேயனும் எந்த விளக்கம் கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுக்கு பாடல்கள் தான் பெரிய அளவில் பெயர் வங்கி கொடுத்தது. இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து உருவான பல படங்கள் செம ஹிட் ஆனது.
சீரியல் நடிகை வந்தனா திருமண வாழ்க்கையில்.. சிவகார்த்திகேயன் செய்த செயல்! இப்படியும் நடந்ததாமே!
அதனால் இவர்கள் இருவருமே லக்கிஷாம் என்று சொல்லப்பட்டனர். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடை இமான் ஓபனாக சொல்லியது அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. அதனால் இப்போது மீண்டும் இமான் துரோகத்தை பற்றி பேசி இருப்பதால் சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு தான் இந்த பாடல் உருவாகி இருக்குமோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
