சிரிச்சுக்கிட்டே இருப்பாரே மதன் பாபு.. மனைவி இந்த பிரபலம்? கடத்தல் திருமணம்.. மகள் செய்தது தெரியுமா?
சென்னை: இசை அமைப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய மதன் பாபு பிறகு நகைச்சுவை நடிகராக பலருக்கும் பரிச்சயம் ஆகி இருந்தார்.
மதன் பாபு ஆரம்பத்தில் மதன் பாப் என்ற தன்னுடைய பெயர் வைத்திருந்த நிலையில் அவருடைய நிஜப்பெயர் எஸ் கிருஷ்ணமூர்த்தி தானாம்.

இந்த நிலையில் நடிகர் மதன் பாபு பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை கூறி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் மதன் பாபு இசையமைப்பாளராக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். அதற்கு பிறகு "நீங்கள் கேட்டவை" என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் "அசத்தப்போவது யாரு" என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்திருக்கிறார். இவருடைய சிரிப்பு பலருக்கும் பிடித்தது. சோகமான நேரத்திலும் கூட இவருடைய சிரிப்பை பார்த்த பலரும் வாய்விட்டு சிரித்து விடுவார்கள். இவருடைய ஆரம்ப காலத்தில் இருந்து இவருடைய சிரிப்பால் இவர் தனித்துவமாக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி இருந்தார். அதனாலேயே இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.

அதுபோல இவருடைய நிஜ வாழ்க்கை வெளியே தெரியாத ரகசியமாகத்தான் இருந்து வருகிறது. மதன் பாபு சிறு வயதிலிருந்து தீவிரமான உடற்பயிற்சி ஆர்வலராக இருந்திருக்கிறார். அதுவும் இவர் சார்பட்டா பரம்பரையைச் சார்ந்தவராம். இது பிறகுதான் இயக்குனர் பா ரஞ்சித்துக்கு தெரிய வந்திருக்கிறது. அவர் இது முன்னமாய் தெரிந்திருந்தால் சார்பட்டா திரைப்படத்தில் உங்களையே நடிக்க வைத்திருப்பேன் என்று கூறியிருந்தாராம். அந்த அளவிற்கு மதன் பாபு தீவிரமான குத்துச்சண்டை வீரராகவும் இருந்திருக்கிறார்.
அதுபோல இவருடைய காதல் திருமண கதையும் பலருக்கும் தெரியாதது தான். இவர் ஆரம்பத்தில் இசை அமைப்பாளராக இருந்தபோது இவருடைய மனைவியும் ஒரு பாடகியாக இருந்திருக்கிறார். இசை கச்சேரிகளில் மதன் பாபுவின் மனைவியும், பாடுவாராம். இருவரும் சேர்ந்து பல இசை நிகழ்ச்சிகளுக்கு வெளிநாடுகளுக்கு சென்று கொண்டு இருந்திருக்கிறார்கள்.
அப்போது ஒருமுறை மதன் பாபுவிடம் அவருடைய மனைவி, நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொன்னாராம், உடனே அப்படியே அப்ப நானும் காதலிக்கிறேன் என்று மதன் பாபுவும் கூறி இருக்கிறார். பிறகு சில வருடங்கள் கழித்து மதன் பாபு மனைவி நான் வீட்டை விட்டு வந்து விட்டேன் என்று திடீரென்று இவருக்கு தொலைபேசியில் தெரிவித்து இருக்கிறார்.

இதைக் கேட்டு மதன் பாபு அதிர்ச்சி அடைந்தாலும் தன்னை நம்பிய பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த மதன் பாபு தன்னுடைய நண்பர்களை அனுப்பி கூட்டிட்டு வந்து பிறகு திருத்தணி கோவிலுக்கு சென்று திருமணம் செய்யலாம் என்று கூட்டிட்டு போயிருக்கிறார். ஆனால் அங்கு கோவிலில் உடனே அவர்களுடைய திருமணம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்களாம். ரெஜிஸ்டர் முறைப்படி ரெஜிஸ்டர் திருமணம் செய்துவிட்டு நீங்கள் இங்கே வந்தால் தான் திருமணம் செய்து வைப்போம் என்று சொல்லிவிட்டார்களாம்.
அதனால் அங்கிருந்த ஒரு விக்கிரகத்தின் முன்பு திடீரென்று மதன் பாபு அவருடைய மனைவி கழுத்தில் தாலி கட்டி விட்டாராம். பிறகு கணவன் மனைவியாக வாழத் தொடங்கினார்கள். அப்போது இரண்டு வீட்டிலும் சம்மதம் இல்லாததால் பல கஷ்டங்களை தாண்டித்தான் தங்களுடைய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு பிறகு நடிகராக மாறிய போது அதே திருத்தணியில் இவருக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டதாம்.
அதுபோல நடிகர்களில் அதிகமாக இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர் இவராகத்தான் இருக்க முடியும் என்று பயில்வான் சொல்லி இருக்கிறார். அதுபோல ஆரம்பத்தில் இவர் கிட்டார் வாசிப்பாளராக தான் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதுபோல இவருடைய மகள் ஜனனி மதன் ஒரு பாடகியாக இருந்து வருகிறார். பல திரைப்படங்களில் பல ஹிட்டான பாடல்களை பாடி இருக்கிறார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் இடம் பெற்ற "ரோசு ரோசு அழகான ரோசு நான்" என்ற பாடல் அதுபோல வீராப்பு திரைப்படத்தில் இடம் பெற்ற "போன வருவீரோ.." என்ற பல பாடல்களை நடிகர் மதன் பாபுவின் மகள் ஜனனி மதன் பாடியிருக்கிறாராம். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் மதன் பாபுவின் மகள் ஜனனி மதன் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவருடைய குடும்ப புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications