GOAT: விஜய் ஜோடி மீனாட்சி சௌத்ரியை தெரியுமா? மருத்துவர், நீச்சல் வீராங்கனை! அந்த வெப் சீரிஸ் பிரபலம்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The G.O.A.T) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை மீனாட்சி சௌத்ரி பற்றி சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் நடிகையாக மட்டுமல்லாமல் பல திறமைகள் உள்ளவராக இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியிருக்கும் நிலையில் தான் சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில் அவர் கடைசியாக நடித்த கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் தன்னுடைய கட்சி கொடி அல்லது கட்சி சார்ந்த எதையும் அங்கு பயன்படுத்தக் கூடாது இதை ரசிகர்களாகத்தான் எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார்.

கட்சி கொடியை விஜய் அறிமுகப்படுத்திய பிறகு அவர் நடித்து வெளியாகும் முதல் திரைப்படத்தில் அந்த கொடியை பயன்படுத்தக்கூடாது, கொடி பாடலை பயன்படுத்தக் கூடாது என்று விஜய் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் திரைப்படத்திற்கான டிக்கெட் எல்லாமே விற்று தீர்ந்துவிட்டது என்பது விஜயின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
அதுபோல தமிழகத்தில் அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டதும் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் கோட் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் விஜய் மட்டுமல்லாமல் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், யோகி பாபு என்று அதிகமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.

அவர்களோடு இந்த படத்தை இயக்கவும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சம்பிரதாயமாக என்ட்ரி கொடுக்கும் வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய்ராஜ் போன்றவர்களும் இன்று படத்தில் நடித்திருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் ஏஐ மூலமாக ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்க வைத்துள்ளனர். இதுவும் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கிறார். இது பெரிய அளவில் பேசப்படுகிறது.
வெங்கட் பிரபு பிரபலமான நடிகைகளை தேர்வு செய்யாமல் ஏன் மீனாட்சி சௌத்ரியை தேர்வு செய்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் தான் மீனாட்சி சௌத்ரி பற்றி சில ஆச்சரியப்பட்ட வைக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மீனாட்சி சவுத்ரி தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் மகேஷ் பாபுவின் குண்டூர் காரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

அது அதற்கு பிறகு தமிழில் இளைய தளபதி ஆக கொண்டாடப்படும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ஆனால் மீனாட்சி சவுத்ரி 27 வயதில் விஜய்க்கு ஜோடியாக நடித்தாலும் ஆரம்பத்தில் இருந்தே இவர் நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையாகவும் இருந்து வருகிறார். இளங்கலையில் டென்டல் சர்ஜரி படித்து முடிக்கிறாராம்.
டாக்டர் மட்டுமல்லாமல் விளையாட்டு வீராங்கனையாகவும் இருக்கும் இவர் மாடலிங்கில் கலந்துகொண்டு முதல் முதலில் அவுட் ஆப் லவ் (Out of love) என்ற வெப் சீரிஸ் மூலமாக தான் திரைத்துறைக்கு என்ட்ரி ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு தான் இவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது. தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு தமிழில் இருந்து கொலை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நடிகர் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் இவரை சுற்றி தான் கதை நகர்ந்து வரும் அதற்குப் பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது படத்தில் நடிக்கிறார். இனி இவருடைய மார்க்கெட் அடுத்த கட்டத்திற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் ரசிகர்களின் அடுத்த கனவு கன்னியாக மீனாட்சி வலம் வருவாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications