பல வருட தனிமை.. கர்ப்பப்பை பிரச்சனை! மோட்டிவேஷன் டாக்டர்.. விஜயகுமார் பேத்திக்கு இப்படி ஒரு பக்கமா?
சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. ஆனாலும் இணையத்தில் விஜயகுமார் வீட்டு செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அதோடு யார் இந்த தியா என்று பலர் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தியா குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதாவின் முதல் மகள் தான் தியா. தியா அவருடைய அப்பா மற்றும் அம்மாவை போலவே ஒரு டாக்டராக மாறி இருக்கிறார். ஆனால் அவர் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு அதில் தைரியமாக வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அனைவருக்கும் பரிச்சயமான நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவி என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். முதல் மனைவி முத்து கண்ணுக்கு பிறந்தது தான் கவிதா, அனிதா என்ற இரண்டு பெண்களும் அருண் விஜய் என்ற பையனும், பிறகு முத்து கண்ணோடு விஜயகுமாருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

அவருக்கு பிறந்தது தான் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்று மூன்று மகள்கள். அதே நேரத்தில் விஜயகுமாரின் வீட்டில் திரை துறைக்கு வராத ஒரே நபர் என்றால் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா மட்டும்தான். அவர் மட்டும்தான் டாக்டர் படித்துவிட்டு அவரோடு படித்த டாக்டரை காதலித்து திருமணமும் செய்திருந்தார். திருமணத்திற்கு பிறகு அனிதா தன்னுடைய கணவர் கோகுல் மற்றும் குழந்தைகளோடு துபாயில் செட்டில் ஆகி இருந்தாங்க.

சமீபத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அனிதா சென்னைக்கு வந்து தன்னுடைய மகளின் கல்யாணத்தை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். அதற்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு வீட்டையும் அனிதா வாங்கி இருந்தார் அந்த வீட்டில் தான் தன்னுடைய மகளின் நிச்சயதார்த்தம் திருமணம் என எல்லா பங்க்ஷனும் நடந்து இருக்கிறது.

அதோடு தியாவின் அம்மா அனிதா சிறுவயதிலிருந்தே படிப்பு தான் முக்கியம் என்று சொல்லி சொல்லி வளர்த்ததாலயே அப்பா மற்றும் அம்மாவை போலவே தியாவும் ஒரு டாக்டராக மாறி இருக்கிறார். அதுபோல தியாவின் பெரும்பாலான நாட்கள் லண்டனில் தான் கழிந்திருக்கிறது. படிப்புக்காக லண்டனுக்கு போன தியா அங்கு தான் டாக்டர் படிப்பை படித்து முடித்து இருக்கிறார். அதுபோல தியா லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் கூட படித்த திலனுடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக அடிக்கடி போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கும் தியா தன்னுடைய காதல் குறித்து எந்த போஸ்ட்டும் வெளியிடாமல் இருந்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு புகைப்படங்கள் வெளியிட்டு தன்னுடைய காதலை உடைத்து இருந்தார். அதில் ஒரு புகைப்படத்தில் இது நான் உன்னை பார்த்து புரிந்து கொண்ட நூறாவது நாள் எடுத்த புகைப்படம். அதுபோல இந்த புகைப்படம் நம்முடைய திருமணத்திற்க100 நாட்களுக்கு முன்பு எடுத்தது என்று தன்னுடைய கணவர் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
அதுபோல தியாவிற்கு கொரோனா காலகட்டத்தில் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. அப்போது மருத்துவமனையில் செக் பண்ணி பார்க்கும்போது இவருக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருப்பது தெரிந்து இருக்கிறது. அதுபோல கர்ப்பப்பை பிரச்சனையால் உடல் எடை கூடி இருந்தாலும் அந்த பிரச்சனையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதற்கு தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டால் அந்த பிரச்சனையை சரி செய்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தியா காதலித்து திருமணம் செய்த திலன் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவராம். இந்த நிலையில் இவர்களுடைய திருமணம் சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இரண்டு குடும்பத்தினரின் சம்மதத்தோடு நடைபெற்றது. அதோடு திருமணத்தில் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications