மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகிய ஷபானாவுக்கு பதில் இனி யார் தெரியுமா? சன் டிவி நடிகை தான்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து நடிகை ஷபானா திடீரென விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக யார் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் நடிகை ஷபானா ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்கிற சீரியலில் ஹீரோயினியாக நடிக்க கமிட்டானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ஒரு ஆண்டை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் நடிகர் பவன் ரவீந்திரநாவுக்கு ஜோடியாக அஞ்சலி தேவி என்கிற கேரக்டரில் நடிகை ஷபானா நடித்து வந்தார். அதுபோல நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஆரியன் இப்போது ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து தான் விலகுவதாக ஷபானா அறிவித்திருந்தார். ஷபானா என்ன காரணத்திற்காக விலகினார் என்பதை பற்றி தெளிவாக கூறாததால் அவருடைய ரசிகர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் தான் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்றும் செய்திகளை பரப்பி வந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷபானா தான் கர்ப்பமாக இல்லை என்றும் தான் சீரியலில் இருந்து விலகுவதற்கு காரணம் அதுவல்ல என்றும் விளக்கம் கொடுத்திருந்தார். அதோடு தான் சீரியலில் இருந்து விலகும் முடிவை நன்றாக யோசித்து தான் எடுத்தேன் என்றும் தான் விலகுவதற்கு சீரியல் தரப்பில் இருந்தோ அல்லது சேனல் தரப்பில் இருந்து எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. நான் என்னுடைய எதிர்கால ப்ராஜெக்டுக்காக தான் விலகினேன் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
இப்படியான நிலையில் இந்த இனி அஞ்சலி கேரக்டரில் யார் நடிக்க போகிறார் என்று அப்டேட் கசிந்து இருக்கிறது. அதாவது இனி அஞ்சலி கேரக்டரில் நடிகை தேப்ஜானி மோடக் நடிக்க இருக்கிறார் என்று தெரிகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலில் நடிகை பாவனிக்கு பதிலாக இவர்தான் நடித்திருந்தார். அதுபோல வானத்தைப்போல சீரியலில் சந்தியாவாக தேப்ஜானி மோடக் கலக்கிக் கொண்டிருந்தார்.
ஆனால் திடீரென்று அவர் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது. சீரியலிலும் இப்போது சந்தியா கேரக்டர் அதிகமாக காட்டப்படுவதில்லை இந்த நிலையில் இவர்தான் இனி அஞ்சலியாக மிஸ்டர் மனைவி சீரியலில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் நடித்த காட்சிகள் இனி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications