சன் டிவியில் கேப்ரில்லா நடிக்கும் புது சீரியல்.. ஹீரோ இந்த நடிகரா? காதல் காட்சிக்கு பஞ்சம் இருக்காதே
சென்னை: நடிகை கேப்ரில்லா விஜய் டிவியில் சமீபத்தில் நடித்து வந்த ஈரமான ரோஜாவே சீரியல் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து இப்போது சன் டிவியில் புது சீரியல் கதாநாயகியாக கமிட் ஆகி இருக்கிறார். அவர் நடிக்கும் புது சீரியலுக்கான பூஜை ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் விரைவில் அந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சன் டிவியில் கேப்ரில்லாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகன் யார்? சீரியல் பெயர் என்ன போன்ற தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகை கேப்ரில்லாவிற்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இவர் சின்ன திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோ சூட் நடத்தி இளைஞர்களை தன்னுடைய ரசிகர்களாக மாற்றியிருக்கும் கேப்ரில்லா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.
அதற்கு முன்பே இவர் 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் டிவியில் 7சி சீரியலில் தன்னுடைய நடிப்பை தொடங்கிய கேப்ரில்லா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அதுவும் இவர் 5 லட்சம் ரூபாயுடன் வெளியேறியது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுக் கொண்டிருந்தார். இப்படியான நிலையில்தான் கேப்ரில்லாவிற்கு ஈரமான ரோஜாவே சீசன் 2 வில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலிலும் தன்னுடைய நடிப்பை அருமையாக காட்டியிருந்தார்.
ஆனால் சீரியலில் அதிகமாக அழுது கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை அடிக்கடி காட்டிக் கொண்டிருந்தனர். இப்படியான நிலையில் தான் அந்த சீரியல் முடிவுக்கு வந்தது. ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் முடிவடைந்த பிறகு கேப்ரில்லா எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது சன் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் சீரியலில் கதாநாயகியாக கமிட் ஆகி இருக்கிறார்.
இதுவரைக்கும் விஜய் டிவி சீரியல்களில் அதிகமாக இருந்த கேப்ரில்லா இப்போதும் விஜய் டிவியில் இருப்பார் என்று நினைத்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதோடு கேப்ரில்லா நடிக்கப் போகும் புது சீரியலை வானத்தைப்போல சீரியலை தயாரித்து வரும் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.
கேப்ரில்லா மற்றும் ராகுல் ரவி நடிக்க இருக்கும் இந்த சீரியலுக்கு உறவுகளை அடிப்படையாகக் கொண்ட டைட்டில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதிலும் அனேகமாக "மருமகள்" என்ற டைட்டில் வைக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த பிரமோ இன்னும் வெளியாகாத நிலையில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் ராகுல் ரவி நடித்த "நந்தினி" சீரியல் மற்றும் "கண்ணான கண்ணே" சீரியலில் காதல் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் தூக்கலாக இருந்து நிலையில் கேப்ரில்லாவோடு நடிக்க இருக்கும் சீரியலிலும் அதுபோலத்தான் இருக்குமா? என்று இப்போதே ரசிகர்கள் கேள்விகளை குவிக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications