லோகேஷ்.. மறக்க முடியுமா மர்மதேசம் கண்களை?
சென்னை: மர்ம தேசம் விடாது கருப்பு சீரியல் நடிகர் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலை இன்னும் பலரால் ஜீரணிக்க முடியவில்லை.. சிலரால் நம்பக்கூட முடியவில்லை.
மர்ம தேசம் விடாது கருப்பு.. இந்த சீரியலின் மெகா வெற்றிக்கு காரணம் என்ன என்ற மர்மத்தை இதுவரை யாராலும் அவிழ்க்க முடியவில்லை. 1996ம் ஆண்டு வெளியான இந்த சீரியல், ரசிகர்களுக்கு கொடுத்த அனுபவத்தை தருவதற்கு தமிழில் இன்னொரு தொலைக்காட்சி தொடர் இதுவரை வரவில்லை.
தொழில் நுட்பமாக இருக்கட்டும் .. காட்சியின் பரபரப்பு.. வேகம்.. நடிப்பு என எந்த அம்சமாக இருக்கட்டும், அப்பவே இப்படி ஒரு நெடுந்தொடரா என்று இப்போது youtube தளத்தில் பார்த்தாலும் மூக்கில் விரல் வைக்கிறார்கள்.
இத்தனை வருடங்களாக பேசுபொருளாக இருக்கும் மர்ம தேசம் சீரியலில் கதாநாயகன் இந்த லோகேஷ் தான் . மரணமடையும் போது 34 வயதை எட்டி இருந்த லோகேஷுக்கு, விடாது கருப்பு சீரியல் நடிக்கும் போது வயது 8 மட்டுமே. இந்தப் பிரபல நாடகத்தில் அந்த வயதிலேயே, இவர்தான் ஹீரோ . இப்படிச் சொல்ல கண்டிப்பாக உறுதியான காரணங்கள் இருக்கின்றன.

கண்களின் வழியே காட்சிகள்
விடாது கருப்பு சீரியல் ஆரம்பித்ததும் பிளாக் அண்ட் ஒயிட் வண்ண பிளாஷ் பேக் காட்சிகள் கண்முன்பு விரியத் தொடங்கும். அப்போது ராசுக்குட்டி என்ற கதாபாத்திரம் ஏற்ற இந்த லோகேஷ்தான் கதையின் நடு நாயகமாக இருப்பார். அவரது "கண்களின் வழியாகத்தான்" காட்சிகள் விரிவடையும். அவரது கோணத்தில்தான் கதை நகரும். இதற்கான காரணம் என்ன என்பது கிளைமேக்ஸ் கட்டமான 204வது எபிசோடில்தான் முழுமையாக ரசிகர்களுக்கு புரியும்.
கதாபாத்திரங்களின் ஒவ்வொரு குணாதிசயமும், அவர்களின் ஒவ்வொரு அசைவும், லோகேஷ் கண்ணின் பார்வை வழியாகத்தான் பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்டு இருக்கும். என்னதான் லோகேஷ் கதாபாத்திரத்தின் பெரிய வயது ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் சேத்தன் நடித்திருந்தாலும், சிறு வயது ராசு குட்டியின் ஜஸ்ட் பிம்பம்தான் அவர் என்பதுதான் கதை கரு. எனவே விடாது கருப்பு, ஹீரோ என்றால் லோகேஷ் தான்.

பிடித்த குழந்தை
பிறவி நடிகர் போல, அந்த கதாபாத்திரத்தை மிக எளிதாக கையாண்டு இருப்பார் ராசுக்குட்டி என்ற லோகேஷ். சுட்டியாகவும் அனைத்து கதாபாத்திரங்களின் செல்லமான பிள்ளையாகவும் வலம் வருவது அனைவரையும் கவர்ந்தது. அம்மா, அப்பாவின் செல்ல பிள்ளையாக, அப்பா சகோதரியான அத்தையின் அன்பு மருமகனாக, மாமாவுக்கும் பிடித்த வாண்டாக சுற்றிய பாத்திரம்தான் ராசு குட்டி. அவ்வளவு ஏன், வீட்டையும், ஊரையுமே, பயமுறுத்தும் பாட்டிகூட பேரன் என்ற வகையில் ராசுகுட்டியிடம் அடக்கிதான் வாசித்திருப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கதாநாயகன்
கதையின் நாயகனாக தனது கண்களின் வழியாக கதையை பார்வையாளர்களுக்கு கடத்தும் கருவியாக, ஒரு குட்டி, சுட்டி பையனாக வலம் வந்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர்தான் இந்த லோகேஷ். அந்த முட்டை வடிவிலான கண்கள், சேத்தனின் சின்ன வயது கதாப்பாத்திரம் என்பதற்கு நியாயம் கற்பித்திருக்கும்.

அன்றே அதிர்ச்சி கொடுத்த ராசுகுட்டி
விடாது கருப்பு சீரியலின் இறுதி பாகத்தில் , "நம்ம ராசுக்குட்டியா இப்படி.." என்று ஒரு அதிர்ச்சியான காட்சி வரும். யாருமே யூகித்திருக்க முடியாத அல்லது நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாத விஷயத்தை அந்த பிளாஷ்பேக் காட்சி கண் முன்னே காட்டியிருக்கும். அந்த அதிர்ச்சியில் இருந்து கூட ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. ஆனால் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி அத்துடன் கூட சேர்ந்து கொண்ட கொடுமையை என்ன சொல்வது? லோகேஷ் மறைந்தாலும், ராசுகுட்டியாக மக்களின் மனதில் என்றும் நீங்காமல் நிலை பெற்றிருப்பார் என்பதை தவிர?.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications