“டாப் குக்கு டூப் குக்கு” நிகழ்ச்சியை தயாரிப்பது வெங்கடேஷ் பட் தானா? விளக்கம் கொடுத்த பிரபலம்
சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய வெங்கடேஷ் பட் "டாப் குக்கு டூப் குக்கு" என்ற நிகழ்ச்சியில் நடுவராக இணைந்திருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் தான் தயாரிக்கிறார் என்று செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து மீடியா மேஷன்ஸின் ரவூஃபா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
விஜய் டிவியில் பெரிய அளவில் வெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் இடம் பிடித்திருக்கிறது. ஆனால் நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளியில் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் இந்த ஐந்தாவது சீசனில் இருந்து விலக போவதாக அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து மீடியா மேஷன்ஸ் நிறுவனம் ரவூஃபா விஜய் டிவியில் உடனான தங்களுடைய பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். மீடியா மேஷன்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பல்வேறு செய்திகள் அப்போது இணையத்தில் பேசப்பட்டது. இப்போது இதற்கான பதில் கிடைத்திருக்கிறது. சன் டிவியில் வெங்கடேஷ் பட் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகி இருக்கிறது.
" டாப் குக்கு டூப் குக்கு" என்ற அந்த நிகழ்ச்சி மே மாதத்தில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் தயாரிக்கிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இதுகுறித்து மீடியா மிஷின்ஸ் நிறுவனத்தை சார்ந்த ரசீஃபா பேட்டி ஒன்றுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் "VB DACE" என்ற பெயரில் தான் சன் டிவி நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேஷ் பட் தான் என்ற தகவல் சிலர் போகிறப்போக்கில் கிளப்பிய வதந்தி தானாம்.
மீடியா மேஷன்ஸ் நிறுவனம் விஜய் டிவியில் இருந்து வெளியேறியதும் கூடவே வெங்கடேஷ் பட்டும் கிளம்பிவிட்டார். விஜய் டிவியில் அவரை ரொம்பவே பாப்புலர் ஆக்கிய மீடியா மேஷன்ஸின் செட்டுக்கும் வெங்கடேஷ் பட்டுக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறதால் விஜய் டிவி கூப்பிட்டும் அவர் அங்கு தொடரவில்லை. இப்படி இருக்கும் போது வெங்கடேஷ் பட் சன் டிவியில் தனியாக நிகழ்ச்சி தயாரிக்கிறார் என்கிற தகவல் எப்படி பரவியது என்று எங்களுக்கே தெரியவில்லை.
மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தான் "டாப் குக்கு டூப் குக்கு" என்கிற இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்க இருக்கிறது. எங்களுடைய மீடியா பணியில் முதல் முறையாக சன் டிவியில் சேர்ந்திருக்கிறோம். ஆனால் இது குறித்து சோசியல் மீடியாவில் நிறைய பேர் என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் இது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்த நிகழ்ச்சி இருக்குமா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். எங்களுடைய நிகழ்ச்சியில் போட்டி மும்முனைப்போட்டியாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அதனால் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் போட்டியாக இதை பார்க்க வேண்டியது இலலை என்று அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications