சிறகடிக்க ஆசை ஸ்ருதியின் அம்மாவாக கலக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? பின்னணி தகவல் ஆச்சரியம் தான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இப்போது அதிகம் பேசப்படும் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் ஸ்ருதியின் அம்மாவாக வில்லி கதாபாத்திரமாக அனைவரையும் கவர்ந்திருப்பவர் தான் ஷீலா. இவர் சமீபத்தில் கொடுத்த இன்டர்வியூ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை
சிறகடிக்க ஆசைகளில் தற்போதைய கதைப்படி இதுவரைக்கும் குடும்பத்தை ஆட்டிப்படைத்து மீனாவே அசிங்கப்படுத்திக் கொண்டு இருந்த விஜயாவை ஸ்டுபிட் அம்மா தான் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதை பார்க்கும்போது நல்லா இருக்கு என்று பலரும் பாராட்டி வருகின்றனர். ஸ்ருதியின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் நடித்த பாத்திரம் காரணமாகவே ரசிகர்கள் இவருக்கு "செக் அம்மா" என்ற பட்டப்பெயரையே வைத்து அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஸ்ருதியின் அம்மா
காரணம், அந்த சீரியலில் எப்போதும் செக் எடுத்துக்கொண்டு வந்து சைன் வாங்குவது தான் இவரது முக்கிய வேலை என ரசிகர்கள் நகைச்சுவையாக கூறி வருகிறார்கள். இந்த சீரியலுக்கு முன்பும் பல சீரியல்களில் நடித்திருந்தாலும், உண்மையான பெரிய வெற்றியை இவருக்கு கொடுத்தது சிறகடிக்க ஆசை தான். அதன் பிறகு தான் இவர் அதிகமாக கவனிக்கப்பட ஆரம்பித்தார். தற்போது மிகவும் பிஸியான சீரியல் நடிகையாக மாறியிருக்கிறார்.
இவர் நடித்துள்ள மற்ற சீரியல்களையும் பார்த்தால், காத்துவாக்குல ரெண்டு காதல் சீரியலில் ஹீரோவின் அம்மாவாக நடித்துள்ளார். அதேபோல் சரோஜினி, தாயம்மா குடும்பத்தார் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

பின்னணி தகவல்கள்
ஆனால், இவரது பின்னணி பற்றி தெரிந்தால் தான் பலருக்கும் உண்மையான ஆச்சர்யம் ஏற்படும். ஷீலாவின் தாத்தா தான் பிரபலமான ஆர்.ஆர். சந்திரன். இவர் ஒரு கேமராமேன் மட்டுமல்லாமல், ப்ரொடியூசர் மற்றும் டைரக்டர் ஆகவும் பணியாற்றியவர். அவர் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கிய படங்களில் முக்கியமானது ரத்தக்கண்ணீர். அந்த படத்தில் வரும் பல வசனங்கள் இன்றும் டிரெண்டாக பேசப்படுவதற்குக் காரணம் அவருடைய எழுத்து திறமையே.
டான்ஸர்
இப்படிப்பட்ட சினிமா பின்னணியில் இருந்தாலும், ஷீலாவின் ஆரம்பம் மிகவும் வித்தியாசமானது. அவர் முதலில் கலா மாஸ்டர் நடத்தும் டான்ஸ் கிளாஸில் தான் டான்ஸ் கற்றுக்கொண்டார். அதன் பிறகு சினிமாவில் பேக்ரவுண்ட் குரூப் டான்சராக தனது பயணத்தை தொடங்கினார்.
அவரது முதல் படம், கேப்டன் நடித்த அலெக்ஸாண்டர் படத்தின் டைட்டில் பாடலில் நடனம் ஆடியதே. அதன்பிறகு காதலே நிம்மதி, லவ் டுடே போன்ற படங்களிலும் டைட்டில் பாடல்களில் நடனமாடியுள்ளார். மேலும் தை பொறந்தாச்சு படத்தில் வரும் "சிரிப்ப கொஞ்சம் கடன்கொடுடா சிநேகிதா" பாடலிலும் நடனம் ஆடியவர் இவர்தான். அந்த பாடலுக்கு நடனம் ஆடியபோது கூட அவர் கர்ப்பிணியாக இருந்தாராம் என்பது இன்னும் ஆச்சர்யமான தகவல்.

விஜயகாந்த் பாடல்கள்
அதுமட்டுமல்லாமல் கள்ளழகர் போன்ற படங்களிலும் கல்யாண பாடல்களில் தோன்றி இருந்துள்ளார். இப்படியாக பல ஆண்டுகள் பேக்ரவுண்ட் டான்ஸராக பணியாற்றிய பிறகே, அவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பல வருடங்கள் கழித்து தான் அவருடைய உண்மையான வெற்றி ஆரம்பித்துள்ளது. இன்று சிறகடிக்க ஆசை சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து, மிகவும் பிஸியான சீரியல் நடிகையாக மாறியுள்ளார் ஷீலா.
ஒரு பேக்ரவுண்ட் டான்சராக ஆக ஆரம்பித்த பயணம், இன்று முக்கியமான டெலிவிஷன் நடிகையாக உயர்ந்திருப்பது - இது உண்மையிலேயே அவரது கடின உழைப்பின் பலன் தான் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications