தக்லைஃப் படத்திற்கு நடிகர் கமலின் காஸ்ட்யூம் டிசைனர் யார் தெரியுமா? பிரபல நடிகரின் மனைவியாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தக் லைஃப் படத்திற்கு நடிகர் கமல்ஹாசனின் காஸ்ட்யூம் டிசைனர் பிரபல நடிகரின் மனைவியாமே! அவர் யார் என்பது தெரியுமா?

உலக நாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தனது 5 வயது முதல் நடித்து வரும் அவர் இன்றும் 69 வயதிலும் அவர் நடித்து வருகிறார்.

Who is the costume designer for Kamal Haasan in Thug Life


கமல்ஹாசனை வெறும் நடிகர் என்ற வட்டத்தில் மட்டும் சுருக்கிவிட முடியாது. பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், டெக்னீஷியன் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை கொண்டவர். ஹாலிவுட்டில் உள்ள டெக்னிக்கை எல்லாம் கோலிவுட்டில் இறக்குவார்.

டெக்னாலஜி வளராத காலத்திலேயே அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமான கேரக்டரில் நடித்திருந்தார். கடைசி வரை அந்த டெக்னிக்கை வெளியுலகிற்கு அவர் சொல்லவே இல்லை. இதனால்தான் அவர் உலக நாயகன் என அழைக்கப்படுகிறார்.

இவர் பரமக்குடியில் பிறந்தவர். தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ளார். நாத்திகத்தை பின்பற்றுகிறார். இவர் அரசியலிலும் குதித்துள்ளார். அவருடைய கட்சி பெரிதாக சோபிக்காவிட்டாலும் அடுத்த ஆண்டு ராஜ்யசபா எம்பியாகிவிடுவார். இதற்காக திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். இவருடைய நடிப்பை பார்த்து பலர் நடிப்பு கற்றுக் கொண்டதாக சொல்வதுண்டு.

எவ்வளவுக்கு எவ்வளவு கமல்ஹாசனிடம் புகழ் இருக்கிறதோ அவ்வளவு அவ்வளவு சர்ச்சையிலும் சிக்கியிருந்தார். கடந்த 1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பிறகு கமலின் திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக வாணி பணியாற்றினார்.

அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவரை விவாகரத்து செய்த கமல்ஹாசன் நடிகர் சரிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகிய இரு மகள்கள் பிறந்தனர். ஆனால் கமலுக்கும் சரிகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து சரிகாவையும் கமல் விவாகரத்து செய்தார்.

தற்போது கமல்ஹாசன் நடிப்பு, பிக்பாஸ், அரசியல் என ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் தக்லைஃப் என்ற படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக உள்ளவர் அமிர்தா ராம். இவர் யாரென்றால் பிரபல நடிகரும் நடன இயக்குநருமான ராம்ஜியின் மனைவிதான்.

ராஜ் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வந்த அமிர்தா, தற்போது ஆடை வடிவமைப்பாளராகிவிட்டார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கமலின் ஆடைகளை வடிவமைத்தவர்இவர்தான். முதல் முறையாக விஸ்வரூபம் படத்தில்தான் கமலுக்கு ஆடைகளை வடிவமைத்தார். அமிர்தா நியூயார்க்கில் உள்ள ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரியில் படித்தவர்.

இந்தியன் 2 படத்திலும் அமிர்தாதான் ஆடை வடிவமைப்பாளர். 90 வயது இந்தியன் தாத்தாவுக்கு பார்த்து பார்த்து ஆடைகளை வடிவமைத்து வருகிறாராம். அது போல் ரஜினியின் கபாலி, தனுஷின் வடசென்னை, விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+