நடிகர் பப்லுவின் முதல் மனைவி இவர் தானாம்.. இத்தனை தியாகங்களை எளிமையாக செய்ய காரணம்!?
சென்னை: நடிகர் பப்லுவின் மனைவி பீணா பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் விரைவில் செய்யப்போகும் பெண்ணை அனைவருக்கும் அறிமுகம் செய்த பப்லுவின் முதல் மனைவியை குறித்து யாரும் அறியாத பல சுவாரசியமான செய்திகள் வெளியாகி இருக்கின்றது.
நண்பர்களாக பழகி காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நடிகர் பப்லுவின் முதல் மனைவியின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை கேட்பவர்கள் பலரும் புரிந்து கொள்ள முடிகிறது.

குடும்பத்தினர் கொடுத்த தடங்கல்
சின்னத்திரை வெள்ளித்திரை நடிகராக பலருக்கும் தெரிந்த பப்லு என்ற பிரித்விராஜ் சமீபத்தில் சமூக வலைதளத்தில் பலராலும் பேசப்படும் ஒரு நபராக இருந்து வருகிறார். இவர் பீணா என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வீட்டில் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து இருக்கிறார். பீணா மற்றும் பப்லு இருவரும் நண்பர்களாக குழந்தை பருவத்தில் இருந்தே பழகி வந்துள்ளனர். அதற்குப் பிறகு இவர்கள் இருவரும் ஒன்பது வருடம் காதலித்து இருந்தார்களாம். இவர்களுடைய காதல் வாழ்க்கையில் இவர்களுக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக இரு வீட்டிலும் பேச போகும்போது பப்லுவின் வீட்டில் நம்முடைய வசதிக்கு தகுந்தவாறு வேறு பெண் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டார்களாம், அதுபோல பீணாவின் வீட்டிலும் ஒரு நடிகர் வேண்டாம் ஏமாற்றிவிட்டு போய்விடுவார் என்று அப்போதே கூறியிருந்தார்களாம்.

குழந்தையால் வந்த பிரச்சனை
இருவருடைய வீட்டின் எதிர்ப்பையும் மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்திருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு கணவருக்கு கொடுக்கும் மரியாதை தனக்கு தரவில்லை என்று பப்லு குற்றம்சாட்டி இருக்கிறார். திருமணம் முடிந்த அடுத்த வருடமே பீணா கர்ப்பமாக இருந்திருக்கிறார். அப்போது சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் பீணாவை சரியாக கவனித்துக் கொள்ள முடியாமல் தான் இருந்திருக்கிறார். ஆனாலும் பீணா குழந்தை பிறந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று பொறுமையாக காத்திருந்தாராம். பீணாவுக்கு ஜாபர் என்கிற பையன் பிறந்து இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகுதான் பிரச்சனை இன்னும் அதிகமாகி இருக்கிறது. பீணாவின் குழந்தை ஆட்டிசம் பாதித்த குழந்தையாக இருந்திருக்கிறார். அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கி இருக்கிறது. குழந்தைக்கு பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் பீணாவும்,குடும்பத்தினரும் தான் என்று பிரித்விராஜ் அப்போது பலமுறை கோபப்பட்டு சண்டையிட்டதாக கூறியிருக்கிறார்.

வேலையை விட்டு விலக காரணம்
பப்லுவின் மகன் ஆட்டிசம் பாதித்த குழந்தையாக இருப்பதால் இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக பீணா தான் அதுவரைக்கும் பார்த்து வந்த மேனேஜ்மென்ட் வொர்க்கை ரிசைன் செய்து விட்டாராம். ஒரு பெரிய கம்பெனியில் இவர் மேனேஜ்மென்ட் வேலை செய்து வந்த நிலையில், அதை ரிசைன் செய்து விட்டு தன்னுடைய மகனுக்கு வந்த நோய் என்ன என்பதை பற்றியும் அதை எப்படி சரி செய்யலாம், எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக டெல்லியில் உள்ள ஒரு இன்ஸ்டிட்யூட்டில் படித்திருக்கிறார்.

பீணா கேட்ட ஒரே கேள்வி
ஒரு சிங்கிள் மதராக மகனை பார்த்துக்கொண்டு பீணா வளர்த்து வந்தாலும் அவருடைய மகனுக்கு அதிகமாக பிடித்தது பப்லு தானாம். பப்லு வந்ததும் அதிகமாக சந்தோஷம் அடைந்து விடுவாராம். ஆனால் அம்மாவை விட்டு தனியாக பிரிந்து வர மாட்டேன் என்றும் கூறியிருக்கிறாராம். பப்லு மற்றும் பீணா இடையே சண்டை வரும்போது ஜாபர் அதிகமாக பயப்படுவதால் இனி நான் இங்கே இருக்கவில்லை என்று தனியாக வாடகை வீட்டில் பப்லு இருந்து வந்தாராம். அப்போதுதான் அவர் தனிமையில் இருந்ததால் ஒரு பெண்ணோடு பழகி தற்போது அந்த பெண்ணை திருமணம் செய்து இருப்பதாக கூறி இருக்கிறார். தான் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் பெண்ணை பற்றி பீணாவிடம் கூறும்போது அவர் இவ்வளவு வயது சின்ன பெண்ணையா திருமணம் செய்யப் போகிறாய் என்று மட்டும் தான் கேட்டாராம். பிறகு ஒன்றுமே சொல்லாமல் டைவர்ஸ் கொடுத்து இருவரும் பிரிந்து விட்டார்களாம். தன்னுடைய மகனுக்காக தான் பார்த்து வந்த வேலைகளையும் குடும்பத்தையும் இழந்து தனியாக தவித்து வரும் பீணாவை பற்றி சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications