நீயா நானா கோபிநாத்தின் அண்ணன் இந்த ஜீ தமிழ் நடிகரா? ஆனால் அவர் சீரியலில் மாதிரி நிஜத்தில் கிடையாதாமே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த கோபிநாத் ரசிகர்கள் பலருக்கும் பரீட்சயமானவர் தான். ஆனால் அவருடைய அண்ணன் பிரபல சீரியல் நடிகர் தான் என்பது சிலருக்கு தெரியும் பலருக்கும் தெரியாது. இந்த நிலையில் தன்னுடைய அண்ணன் குறித்து கோபிநாத் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
கோபிநாத் தெள்ளத் தெளிவான பேச்சால் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில் கோபிநாத்தின் அண்ணன் சீரியலில் தன்னுடைய நடிப்பின் மூலமாக மக்களை கவர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கோபிநாத்தின் அண்ணன் யார் அவர் எந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத்தால் பிரபலமடைந்ததா? அல்லது நீயா நானா நிகழ்ச்சியால் கோபிநாத் பிரபலமானாரா? என்பது தான் இப்போதும் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. பல வருடங்களாகவே கோபிநாத் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
சமுதாயத்தில் நடக்கும் அடிப்படை பிரச்சனைகளை பற்றி நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது தன்னுடைய நியாயமான தீர்ப்பின் மூலமாக இரண்டு தரப்பு மக்களையும் சரிசமமாக கையாண்டு மக்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுக் கொண்டிருக்கும் கோபிநாத் சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும்போது தன்னுடைய சொந்த அண்ணன் பற்றி பேசி இருந்தார்.
அதில் நானும் என்னுடைய அண்ணனும் ரொம்பவே பேசிக்க மாட்டோம்... பொதுவா ஒரு பழமொழி சொல்லுவாங்க அஞ்சு வயசுல அண்ணன் தம்பி பத்து வயசுல பங்காளி. அப்படியெல்லாம் இல்லாம எப்பவும் அண்ணனாகவே எங்க அண்ணன் இருந்து வருகிறார். அதிலும் எங்கள் அண்ணன் ஏதாவது ஒன்னுனா தம்பி கிட்ட கேட்டு சொல்றேன் என்று சொல்லுவார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவரே செய்ய மாட்டார்.
நான் அவரிடம் அண்ணா இதற்கு முடிவு நீ சொல்லு என்று சொன்னா கூட இல்லை நீ சொல்லு என எனக்கு ரொம்ப இடம் கொடுப்பார். நிறைய இடத்துல அவர் நகர்ந்து எனக்கு இடம் தந்து என்னை பார்த்து பெருமிதம் படுவார் என்று தன்னுடைய அண்ணனை பற்றி பெருமையாக பேசி இருந்தார். கோபிநாத் அப்படி தன்னுடைய அண்ணனை பற்றி பெருமையாக பேசி இருந்த நிலையில் அந்த அண்ணன் வேறு யாரும் இல்லை அவர் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பிரபாகரன் சந்திரன் தான்.
இவர் ஜீ தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் என்ற சீரியலில் ராமுக்கு தந்தையாக நடித்து வருகிறார். அதுபோல இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மற்றும் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும் சமீபத்தில் முடிவடைந்த பாரதிதாசன் காலனி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் அமைதியின் சொரூபமாகவும் சாந்தமான கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சில நேரங்களில் வில்லத்தனத்தையும் காட்ட தவறுவதில்லை.
இந்த நிலையில் தான் கோபி நாத் தன்னுடைய அண்ணனோடு சமீபத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கோபிநாத்தை போலவே இருக்கும் அவருடைய அண்ணனுக்கு இப்படி ஒரு தம்பி கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் எல்லா அண்ணன்களும் உங்க அண்ணன் போல இருந்தால் பல தம்பிகள் தைரியமாகவும் சுயமாகவும் முடிவெடுப்பார்கள் என்றும் சிலர் பாராட்டுகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications