பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலகும் அடுத்த நடிகை.. எதிர்பாராத திடீர் மாற்றங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் பல நடிகர்கள் இவருக்கு பதில் இவர் என மாற்றம் அடைகின்றனர். அந்த வரிசையில் தற்போது புது நடிகை அறிமுகமாக இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மட்டும் தான் அதிகமாக கதாநாயகிகள் நடித்து இருந்தாலும் கதாநாயகிகளே அதிகமாக மாற்றம் அடைந்து கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் பல நடிகைகள் இந்த சீரியலை விட்டு விலகி இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது முக்கியமான கேரக்டரில் நடித்து வந்த நடிகை வெளியேற இருக்கிறாராம்.

அண்ணன் தம்பி கதை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கிறது. இந்த சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு இருந்தாலும் இதில் பல நடிகர் நடிகைகள் முக்கியமான கேரக்டரிலே நடித்து வருகின்றனர். ஒவ்வொரு கேரக்டருமே ரசிகர்களின் மத்தியில் தனித்துவமான வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக மீனா, முல்லை, தனம், ஐஸ்வர்யா என ஒவ்வொரு கேரக்டருக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் பல வருட காலம் ஆக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவது சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை காட்டுகிறது.

தொடரும் இவருக்கு பதில் இவர்
பாண்டியன் ஸ்டோர் சீரியல் விஜய் டிவியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியல் ஆயிரம் எபிசோட்களின் வெற்றியை கொண்டாட இருக்கும் நேரத்தில் இந்த சீரியலில் அடுத்தடுத்த பல நடிகைகள் மாறிக்கொண்டிருக்கின்றனர். விஜே சித்ரவாக நடித்த முல்லை கேரட்டரில் அதற்குப் பிறகு இரண்டு முல்லை கேரக்டர்கள் வந்துவிட்டனர். அதுபோல ஐஸ்வர்யா கேரக்டரில் தொடர்ந்து அடுத்தடுத்த மாற்றங்கள் வந்து கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் இந்த சீரியலில் புது மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் நாட்கள் செல்ல செல்ல அதை ஏற்றுக்கொள்ள வருகின்றனர். இதனாலையே என்னவோ இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்
இந்த சீரியலில் மீனாவை அதிகமான ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். மீனாவின் அப்பாவாக ஜனர்தனன் கேரக்டரில் நடிக்கும் நடிகரை அதிகமான ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும் மீனாவின் தங்கையாக எப்பவாது தலையை காட்டும் நடிகைக்கு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர் மீனாவின் தங்கையாக இதுவரை இரண்டு பேர் மாறி இருக்கின்றனர். முதலில் நடிகை வினிஜா நடித்திருந்தார். அதற்குப் பிறகு வினிஜாவிற்கு பதிலாக கீர்த்தி விஜய் நடித்தார். இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் மீனாவின் தங்கை கேரக்டர் காட்டப்படுவதால் கீர்த்தி விஜய் மீண்டும் வருவார் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு இப்போது ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.

புது நடிகை அறிமுகம்
கீர்த்தி விஜய்க்கு பதிலாக பவ்யஸ்ரீ என்ற நடிகை நடிக்க இருக்கிறாராம். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான திருமதி ஹிட்லர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான். பின்பு இப்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தான் நடிக்கும் செய்தியை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இவர் எந்த கேரக்டரில் நடிக்கப் போகிறாரோ? என்று முதலில் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது தான் மீனாவின் தங்கையாக இவர் நடிக்க இருக்கும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. அடிக்கடி இவருக்கு ஒரு பதில் இவர் கொடுத்துக் கொண்டே இருப்பதாலும் இந்த சீரியலின் டிஆர்பி குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. எதற்காக இப்படி செய்கிறார்கள்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பொதுவாக நீண்ட தொடர்கள் என்றாலே அதில் அதிகமானோர் மாற்றப்படுவது பொதுவானது தான். அது போல தான் தற்போது கூட நடைபெற்று இருக்கிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
சுந்தரி சீரியல் அனுவுக்கு கிடைத்த பெரிய சந்தோஷம்.. கணவர் உருக்கம்.. சினிமாவை விட்டு விலகியது இதற்காகத்தானா? -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications