நீயே கொன்னுடு அம்மா.. கடைசியாக மாரிமுத்து பேசிய வார்த்தை..மாற்றப்பட்ட குரல்.. இனி குணசேகரன் இவரா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென்று நேற்று மாரடைப்பு காரணமாக மாரிமுத்து காலமானார். அதற்கு பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலின் ரசிகர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றனர்.

இந்த நிலையில் அவர் நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் இனி யார் நடிப்பார் என்று கேள்விகளும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
அதுபோல நேற்றைய எபிசோடில் தன்னுடைய அம்மாவிடம்," என்னை கொன்றுவிடு அம்மா" என்று அழுவது போன்று தான் காட்சிகள் தான் அமைந்தது. அது எபிசோட்டில் வரும்போது ரசிகர்கள் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சினிமாவாக இருந்தாலும் சீரியலாக இருந்தாலும் சரி அந்த அதில் வில்லன் கதாபாத்திரம் பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் தான் ரசிகர்களின் மனதை கவர முடியும் என்பதற்கு சாட்சியாக தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது இந்த சீரியல் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கியமான காரணமாக இந்த சீரியலின் முதுகெலும்பாக குணசேகரன் கேரக்டர் இருந்து வருகிறார்.

குணசேகரன் கேரக்டர் இந்த சீரியலில் பெண்களை அடிமையாக நடத்திக் கொண்டிருந்தாலும் தன்னுடைய தனித்துவமான பாடி லாங்குவேஜ் மற்றும் டயலாக் மூலமாகவே அதிகமான ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார். அதில் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து பலருடைய மனதையும் கவர்ந்து குணசேகரன் வீட்டு நாற்காலியில் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தான் நேற்று கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று எபிசோடுக்காண டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது நெஞ்சு வலி ஏற்பட அதை சமாளித்துக் கொண்டு தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலம் இல்லாமல் மாரிமுத்து இறந்து விட்டார்.
இந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அவர்கள் கடைசியாக பேசிய டப்பிங் நேற்றைய எபிசோட்டில் வந்தது. எபிசோட்டில் விசாலாட்சி அதாவது குணசேகரனின் அம்மா சக்திக்கு தன்னுடைய நகைகளை கொடுத்திருப்பார். அதை தெரிந்து கொண்ட குணசேகரன் தன்னுடைய அம்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது குணசேகரன் தன்னுடைய அம்மாவிடம், "அம்மா என்ன நீயே கொன்னுரு. நான் நல்லவன் இல்லை என்று சொல்லிட்டாயே, உன் கையால நீயே என்ன கொன்னுரு" என்று கதறி அழுதிருப்பார். அதற்குப் பிறகு விளம்பரம் வந்தது .விளம்பரத்திற்கு பிறகு குணசேகரன் உடைய குரல் இல்லை. அவருடைய நடிப்பு மட்டும்தான் இருந்தது.
அவருக்கு பதிலாக வேறு ஒருவர் டப்பிங் பேசி இருந்தார். இதை பார்க்கும் போது பலருக்கும் கஷ்டமாக இருப்பதாகவும் இத்தனை நாட்களாக குணசேகரனாக கம்பீரமான இவருடைய குரலை கேட்டு வந்திருந்த நிலையில் இப்போது குரலும் இல்லை இன்னும் ஒரு சில எபிசோடுகளில் இவரும் இல்லை என்பதை எங்களால் தாங்க முடியவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் இந்த சீரியல் இத்தனை நாட்களாக வெற்றிகரமாக டிஆர்யில் முன்னணி இடத்தை பிடித்திருந்த நிலையில் இனி மாரிமுத்து குணசேகரன் ஆக நடித்த கேரக்டரில் இனி யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. அந்த வகையில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் வேல ராமமூர்த்தி இனி நடிக்கப்படலாம் என்ற சில பேச்சுக்கள் வலம் வருகிறது.
சமீபத்தில் கூட ஒரு திரைப்படத்தில் நடிகர் மாரிமுத்துவும் வேல ராமமூர்த்தியும் இணைந்து நடித்திருக்கின்றனர். அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் நடிகர் இளவரசுவும் இந்த கேரக்டரில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால் இனி எந்த நடிகர் வந்து நடித்தாலும் அந்த நடிகரை குணசேகரன் கேரக்டரில் ரசிகர்கள் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்வதற்கு அதிகமாக சிரமம் தான் படுவார்கள். இனி வரும் நடிகர் குணசேகரன் போன்று அழுத்தமாக நடிக்க முடியுமா? என்பது பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் நேற்றைய எபிசோடிலே குணசேகரின் குரல் மாறி இருக்கும் நிலையில் இனி அவர் நடித்த எபிசோடுகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாவது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications