சம்யுக்தா ரகசியத்தை ஆடியோவாக வெளியிட்ட "பிரபல” சீரியல் இயக்குனர்..இவரா இப்படி? வெளிவந்த உண்மை
சென்னை: சீரியல் நடிகை சம்யுக்தா பற்றி ஆடியோ ஒன்றை அவருடைய கணவர் விஷ்ணுகாந்த் வெளியிட்டு இருந்தார்.
அந்த ஆடியோவில் சம்யுக்தா தன்னைப் பற்றிய ரகசியங்களை ஒரு நபரிடம் அண்ணன் என்று கூறிக் கொண்டிருப்பார்.
அந்த நபர் பிரபல சீரியல் இயக்குனர் தான் என்று சம்யுக்தா கூறி இருக்கிறார்.
நடிகை சம்யுக்தா மற்றும் அவருடைய கணவர் விஷ்ணுகாந்த் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து இருந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அந்த வகையில் விஷ்ணுகாந்த தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போதும் சம்யுக்தா வேறொரு நபரோடு பேசிக் கொண்டிருந்தார் என்று தனக்கு ஒரு நபர் அனுப்பிய ஆடியோ என ஆடியோ ஒன்றை லீக் செய்திருக்கிறார். அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் சம்யுக்தா ஒரு நபரோடு பேசிக் கொண்டிருப்பார். அவர் அண்ணன் என்று அழைத்து பேசியிருப்பார். அவரும் பல அட்வைஸ்கள் கொடுத்திருந்தார்.
ஆனால் கடைசியில் சம்யுக்தா பேசியதை எல்லாம் ரெக்கார்டு செய்து இருக்கிறார். இந்த நிலையில் சம்யுக்தா அந்த ஆடியோவில் விஷ்ணுகாந்தை காதலித்துக் கொண்டிருக்கும் போது ஏற்கனவே சம்யுக்தா தன்னோடு நிறைமாத நிலவே சீரிஸில் நடித்த ஆர் ஜே ரவியோடு பேசிக்கொண்டிருந்தது பற்றியும் அந்த ஆடியோவில் பேசி இருந்தார். அது மட்டும் இல்லாமல் ஆர் ஜே ரவியை தான் காதலித்ததும் ஆனால் அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் பல தகவல்களை அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.

தற்போது அந்த ஆடியோவில் சம்யுக்தாவுடன் பேசிக் கொண்டிருந்த அந்த அண்ணன் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் நான் என் அண்ணனா நெனச்சி NINI டைரக்டர் ஹரிஷ் கிட்ட இதையெல்லாம் சொன்னேன். ஆனால் அவர் அதை கேவலமா ரெக்கார்ட் பண்ணி விஷ்ணுகாந்த்க்கு அனுப்பி அவர் அதை மீடியால கொடுத்து இப்போ பெரிய நியூஸா போய்கிட்டு இருக்கு என்று கூறியிருக்கிறார்.
இந்தப் பதிவுக்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஒரு அண்ணனாக நினைத்து ஒரு பெண் பேசியதை எல்லாம் எவ்வளவு வக்கிரம் இருந்திருந்தால் இதை ரெக்கார்ட் செய்து வைத்திருப்பார் என்று சிலர் கூற, இன்னும் ஒரு சிலர் இப்படி ரெக்கார்டு செய்து வைத்ததால்தான் சம்யுக்தா மீது தப்பு இருக்கும் விஷயமே வெளியே தெரிந்தது இல்லை என்றால் எல்லோரும் விஷ்ணுவை தான் குறை சொல்லி இருப்பார்கள் என்றும் இருதரப்பட்ட கருத்துக்கள் குவிந்து வருகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications