சிவாங்கியின் காதலன் இவர்தானா? ரகசியத்தை உடைத்த தர்ஷன்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான்
சென்னை: சிவாங்கி தன்னுடைய பிறந்தநாளில் லைவில் குக் வித் கோமாளி பிரபலங்களோடு கலந்து கொண்டிருந்தார்.
அப்போது தர்ஷன் சிவாங்கியின் காதலன் யார் என்று ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.
தற்போது இந்த செய்தி தான் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது.

தன்னுடைய பாடும் திறமை மூலமே விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியால் சிவாங்கி சின்னத் திரைக்குள் நுழைந்தார். ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் எந்தவித பெரிய வாய்ப்பும் இல்லாமல் இருந்த சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன் குறும்பான ஆட்டிட்யூட் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரும் தங்கள் வீட்டுப் பெண் போல் நினைக்கும் அளவிற்கு ரீச் ஆனார்.
அப்படியே ரியாலிட்டி ஷோ பக்கம் பொழுதுபோக்கிட்டு இருந்த சிவாங்கி, திரும்பவும் முழுநேர பாடகியாக நல்ல நல்ல பாடல்களை தன் அருமையான குரலில் தற்போது கொடுத்து வருகிறார்.அதிகமாக மெலடி ரக பாடல்களை பாடி வந்த சிவாங்கி தற்பொழுது ராப் டைப் பாடல்களையும் பாடிக் கொண்டிருக்கிறார் அது அவருடைய ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவங்களை கொடுத்துள்ளதாம்.
இந்த நிலையில் குக் வித் கோமாளியில் இந்த சீசனில் குக்காக கலந்து கொண்டிருப்பதால் இனி நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். இடைத்தொடர்ந்து ரசிகர்கள் மீண்டும் நீங்கள் கோமாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய பிறந்த நாளில் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே லைவில் தர்ஷன், வீஜே ரக்சன் இன்னும் ஒரு சில குக் வித் கோமாளி பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது தர்ஷன் இந்த பிறந்த நாளில் நீ உன்னுடைய காதலனை சந்திக்க என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.
அதுபோல நீ யாரை காதலிக்கிறாய் என்பதை சொல்லு என்று தர்ஷன் கேட்க, நான் யாரை சொல்லுவது இன்னும் அந்த நபரை பார்க்கவில்லை. இந்த வருடமாவது அவரை பார்த்து விட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். என்னுடைய காதலனை நான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று விளையாட்டாக சிவாங்கி சொல்லி இருக்கிறார். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அஸ்வின் அல்லது சாம் தான் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications