கதை கேளு... கதை கேளு.. அம்மாவும் பிள்ளையும் சொல்லிக்கிட்ட கதை கேளு...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனை அவன் அம்மா கூப்பிட்டு அனுப்பறாங்க. அப்போ ஒரு கதை சொல்றான் மாயன்.

மாயனும், அரவிந்தும் ரெட்டை பிள்ளைகள்.மாயன் தேவியை ஏமாத்தி கல்யாணம் செய்துக்கறான். தேவியை கட்டிக்க வேண்டிய அரவிந்த் தாமரையை கல்யாணம் செய்துக்கறான்.

மாயனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அரவிந்த் அறுபதாம் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறான்.

கூப்பிட்ட

கூப்பிட்ட

எதுக்கும்மா வேலையில இருக்கறவனை கூப்பிட்டேன்னு மாயன் கேட்க..ஏண்டா.. என்னவோ உன் வீட்டுல எல்லாருமே உன் கட்டுப்பாட்டுல இருக்கறதா சொன்னே.. அங்க வந்தா உனக்கு ஒரு மரியாதையும் இல்லைன்னு அம்மா சொல்றாங்க.

சாரிம்மா

சாரிம்மா

அம்மா சாரிம்மா..வீட்டுல பத்திரிகை குடுக்க வந்தப்போ உன்ன மானக்கேடா பேசினாங்களாமே.. தக்காளி நான் மட்டும் இருந்திருந்தேன்னு... சொல்றான். டேய் போதும்டா..அரவிந்த் வந்து என்னமா எங்களுக்காக அவங்களை சண்டை போட்டான் தெரியுமா.. நீ வேஸ்ட்டுடான்னு சொல்றாங்க.

சாப்பாடு இல்லை

சாப்பாடு இல்லை


எம்மா... உனக்கு ஒரு கதை சொல்றேன் கேளு.. தினம் பிச்சைக்காரனுக்கு ஒருத்தி சாப்பாடு போடுவாளாம். இன்னொருத்தி ஒண்ணும்
இல்லைன்னு சொல்லி அனுப்பிடுவாளாம். ஒரு நாள் வழக்கமா போடறவ போடலையாம். போடாதவ அன்னிக்கு சாப்பாடு போட்டாளாம்.

மூதேவி

மூதேவி

அதுக்கு அவன் சொன்னானாம் என்னாச்சுன்னு தெரியலை...வழக்கமா போடற மூதேவி இன்னிக்கு சோறு போடலை. எப்போதும் போடாத ஸ்ரீதேவி இன்னிக்கு போட்டு இருக்கான்னு..எம்மா புரியுதா..அப்படித்தான் இந்த மாயன்னு சொல்றான்.

நான் ஒரு கதை

நான் ஒரு கதை

அதுக்கு அம்மா சொல்றாங்க டேய் நன் ஒரு கதை சொல்றேன் கேளுடா..ஒருத்தன் ஒரு ஊருக்கு யானையை அழைச்சுக்கிட்டு வந்து சங்கிலியில கட்டிப் போட்டானாம். இன்னொருத்தன் என்னங்க இந்த சங்கிலியை அத்துகிட்டு யானையால போக முடியாதான்னு கேட்டானாம்.

பதிஞ்சு போச்சு

பதிஞ்சு போச்சு

அது குட்டியா இருக்கும் போது சங்கிலியில கட்டிப் போட்டேன்..அத்துகிட்டு போக முயற்சி செய்துச்சு.அப்போது மனசுல இந்த சங்கிலியை அத்துகிட்டு போக முடியாதுன்னு பதிஞ்சு போச்சு. அதனால்தான் இப்பவும்முயற்சி செய்யாம இருக்குன்னு. இந்த கதை எதுக்கு தெரியுமா...தேவி மனசை மாத்த முடியாதுன்னு இன்னும் அவளை நெருங்காம இருக்கியே அதுக்குடான்னு சொல்றாங்க அம்மா...

கதை சூப்பராத்தான் இருக்கு..ஆனா தேவி எப்படின்னு மாயனுக்குத்தானே தெரியும்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+