காதல் திருமணம் செய்த எங்களுக்கு தடையாக பிரச்சனை செய்த நபர் இவர்தான்..போட்டு தாக்கிய கனி மற்றும் விஜி
நடிகை விஜி மற்றும் அவருடைய சகோதரி கனி என் இருவருடைய காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த நபர் பற்றி தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்னை: நடிகை விஜி சென்னை 28 என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி சன் டிவியில் நாயகி சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
விஜியின் சகோதரி ஆன கனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்று இருந்தார்.
கனி இயக்குனர் திருவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவருடைய காதலுக்கு எதிர்ப்பாக அவருடைய சகோதரி நிரஞ்சனி தான் இருந்திருக்கிறார். அதைப்பற்றி பல செய்திகளை பகிர்ந்து இருக்கின்றனர்.

காதல் கோட்டை அகத்தியன்
இயக்குனர் அகத்தியன் என்று கேட்டால் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் தல அஜித்தின் 'காதல் கோட்டை' படத்தின் இயக்குனர் அகத்தியன் என்று விளங்க சொல்லி கேட்டால், முகம் தெரிகிறதோ இல்லையோ.. பெயர் அளவில் அனைவருக்கும் நினைவில் வந்து விடுவார். அந்த அளவிற்கு தல அஜித்தின் கேரியரில் காதல் கோட்டை ஒரு முக்கியமான மைல்கல். காதல் கோட்டை மூலம் அஜித்தின் வாழ்க்கை கோட்டைக்கு பாதை அமைத்துக் கொடுத்தவர் இயக்குனர் அகத்தியன்.

சினிமா குடும்பம்
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் இயக்குனர்களில் ஒருவரான அகத்தியன் அவர்களின் மகள்கள் தான்.. விஜி, கனி, நிரஞ்ஜனி,தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சினிமா குடும்பங்கள் ஆன சிவாஜி, விஜயகுமார்,சிவக்குமார், போன்றவர்களை போன்று இவர்கள் குடும்பமும் மிகப்பெரிய சினிமா குடும்பமாக தான் இருக்கிறது. ஏற்கனவே இவரது மகள் 'விஜி' என்ற விஜயலட்சுமி 'சென்னை28' படம் மூலம் அறிமுகமாகி, மேலும் சில படங்களிலும் நடித்து பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் வந்து நன்றாகவே பிரபலமாகிவிட்டார்.சமீபத்தில் முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியின் விஜயலட்சுமி வெற்றி பெற்றிருந்தார்.

காரக்குழம்பு கனி
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் 'குக் வித் கோமாளி' புகழ் கனி அவர்களைப் பற்றி பெரிய அளவிற்கு அறிமுகம் தேவையில்லை, ஏனென்றால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் அதைத் தொடர்ந்து வந்த சில ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்று சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமின்றி இணையவாசிகள் இடமும் நன்கு பரிச்சயமானவர் ஆகிவிட்டார் கனி. 'காரக்குழம்பு'கனி என்று அடமொழியோடு அறிமுகப் படுத்தும் அளவிற்கு நன்றாகவே பேமஸ் ஆகிவிட்டார். இவரது கணவர் தான் இயக்குனர் திரு அவர்கள்... 'தீராத விளையாட்டுப் பிள்ளை, நான் சிகப்பு மனிதன், சந்திரமொளலி' போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.

காதல் திருமணம்
சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும்பாலும் 'நிரஞ்ஜினி' பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் நடித்தது என்னவோ.. ஒரே ஒரு படம்தான்.. தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற துல்கர் சல்மானின்.. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் விஜய் டிவி ரக்ஸனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். நிரஞ்ஜனி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும் பொழுது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அவர்கள் கேமராவுக்கு முன்னால் 'கட்' சொல்லிவிட்டு.. கேமராவுக்கு பின்னால் காதல் 'ஆக்ஷனில்' இறங்கி விட்டார் போல...அது கொஞ்ச நாட்களுக்கு முன்பு திருமணத்தில் வந்து முடிந்திருக்கிறது.

காதலுக்கு எதிரி இவராம்
இந்த நிலையில் சமீபத்தில் சகோதரிகள் மூவரும் ஹோட்டலில் அமர்ந்தபடி வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கின்றனர். அதில் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அசை போட்டு இருக்கின்றனர். அப்போது என்னுடைய அக்கா கனி திருவை 21 வருடமாக காதலித்து வருகிறார். நான் என்னுடைய கணவரை 20 வருஷமாக காதலித்து வருகிறேன். ஆனால் எங்களுடைய காதலுக்கு முதலில் எதிர்ப்பாக இருந்தது என்னுடைய தங்கச்சி ரஞ்சனிதான் என்று விஜி பகிர்ந்து இருக்கிறார். அதற்கு காரணம் கனி அக்கா மீது ரஞ்சனிக்கு ரொம்பவே பொசஸ்னஸ். அவ யாருகிட்டயும் அதிகமா பேசினா ரஞ்சனிக்கு பிடிக்காது. கனி அக்கா காதலிக்கும் விஷயம் தெரிஞ்சதும் ஒரு பெரிய எதிர்ப்பு ரஞ்சனி கிட்ட இருந்து தான் வந்தது.

காரணம் இதுதானாம்
அந்த நேரத்தில் ரஞ்சினியை தூங்க வச்சுக்கிட்டு எங்க வீட்டுல ஒரு போன் இருந்தது. அதில் லைட் எரியும் அதில் எல்லாவற்றையும் ஆப் செய்து விட்டு எங்க அக்கா அப்படி அதையே பார்த்துக்கிட்டே இருக்கும். அதில் லைட் எரிஞ்சதும் போனை எடுத்து திரு.. திரு ஐ லவ் யூ திரு என்று கனி பேசுவாள். ஆனால் அப்போ கரெக்டா ரஞ்சினி எந்திரிச்சிருவா. எப்படித்தான் அவளுக்கு தெரியும்னு தெரியல, அப்ப எல்லாம் நிறைய சண்டை போட்டு இருக்கா என்று கூற, அதற்கு ரஞ்சனி அது எதற்கு தெரியுமா? கனி அக்கா எனக்கு ஒரு அம்மா மாதிரி அப்படி ஒரு ஃபீலிலிருந்து இன்னொரு குழந்தை வந்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ அந்த மாதிரி தான் எனக்கு இருந்தது. ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு மெச்சூர் ஆன பிறகு புரிஞ்சுகிட்டேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.
-
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
எந்த மனைவிக்கும் இப்படிப்பட்ட அவமானம் வரக்கூடாது.. ரவி மோகன் மனைவி ஆர்த்தி உருக்கம்.. விஜயுடன் ஒப்பீடு? -
விஜய் சேதுபதி இவ்வளவு ஓபனா பேசுவாருன்னு நினைக்கலையே! வெடவெடுத்து போன VJ பார்வதி! அடுத்த பஞ்சாயத்து -
“ஏ.ஆர். ரஹ்மானுக்கே இந்த நிலைமை என்றால், எனக்கு..? ‘கருப்பு’ படத்தில் நடந்த அதிர்ச்சி அனுபவம்! நடிகை ஆனந்தி ஓபன்! -
Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்












Click it and Unblock the Notifications