பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் தொகுப்பாளர் யார்? விஜய் டிவி வெளியிட்ட அதிகாரப்பூர்வமான பதிவு
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் யார் இந்த சீசனில் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்த தொகுப்பாளர் யார்? என்று ஆறு மணிக்கு தெரியவரும் என்று போஸ்ட் ஒன்று போடப்பட்டிருக்கிறது.
விஜய் டிவியில் பெயர் வாங்கிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததும் பிக் பாஸ் தொடங்கிவிடும். அந்த வகையில் ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தாலும் எட்டாவது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை பலர் விமர்சித்தாலும் போகப்போக இது பற்றி அதிகமாக பேச தொடங்கி விடுவார்கள். இதுதான் ஏழு சீசன்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதுபோல எட்டாவது சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அதிர்ச்சி கொடுத்திருந்தார். தான் எட்டாவது சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என்று திடீர் அறிவிப்பு கொடுத்திருந்தார்.
தனக்கு அதிகமான கமிட்மெண்ட் இருப்பதால் தன்னால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து யார் இந்த சீசனை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் விஜய் சேதுபதி தான் இதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்று சில வீடியோக்களும் புகைப்படங்களும் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது.

புதுச்சேரியில் ஷூட்டிங் நடைபெற்றதாகவும் அப்போது எடுத்த வீடியோக்கள் என்று இணையத்தில் சில புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி இருக்கும் நிலையில் இன்று விஜய் டிவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்த தொகுப்பாளர் யார் என்று ஆறு மணிக்கு தெரியவரும் என்று போஸ்ட் போட்டு இருக்கிறார்கள். அதுவரைக்கும் உங்களுடைய கமெண்ட்களை சொல்லுங்க பார்ப்போம் என்று அவர்கள் கேட்டிருக்கும் நிலையில் இன்று 6:00 மணிக்கு ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலர் விஜய் சேதுபதி தான் இந்த சீசன் தொகுப்பாளர் என்று கூறி வருகின்றனர். ஆனாலும் ஒரு தரப்பினர் கடைசி நேரத்தில் விஜய் டிவி புது தொகுப்பாளர் அறிமுகம் செய்யலாம் என்றும் கூறி வருகிறார்கள். பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் யார் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீங்க உங்க கமெண்ட் தட்டி விடுங்க பாஸ்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications