Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Eeramana Rojaave Serial: லவ்வை சொல்ல ஆறு மாசம்.. இதை குடும்பமே கொண்டாடுது!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Eramana Rojave today episode | Pugazh Akila Romance

    சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் வெற்றி மலரிடம் காதலை சொல்லவே ஆறு மாசம் ஆச்சு. இத்தனைக்கும் இருவரும் புருஷான் பொண்டாட்டி. இவங்க லவ் யூ சொல்லிக்கிட்டதை குடுமபமே சுவீட் சாப்பிட்டு கொண்டாடுது.

    என்ன வழக்கமோ, என்ன இங்கிதமோ... என்னதான் காலம் மாறினாலும், சில இங்கிதங்கள் கூடவா குடும்ப அங்கத்தினர்களை விட்டு வெட்கம் இல்லாமல் பறந்தோடிவிடும்? கிராமத்து கதைகளில் கூட இந்தவித அத்துமீறல் இருப்பதை சகிச்சுக்க முடியலை.

    இதில் வில்லி கூட்டம் வேறு, மலரும் வெற்றியும் லவ்வை சொல்லிக்கிட்டாங்களாம். இனிமேல் நம்ம நினைப்புல மண்ணுதான்னு பேசிக்கறாங்க.புருஷன் பொண்டாட்டி லவ் யூ ன்னு சொல்லிக்கறது அத்தனை பெரிய விஷயமா?

     வெற்றி மலர்

    வெற்றி மலர்

    மலர் வெற்றியின் அண்ணனை காதலித்து வருகிறாள். கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு மாப்பிள்ளை லாரி மோதி இறந்து விடுகிறார். இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போகக் கூடாது என்று மாப்பிள்ளையின் தம்பி வெற்றிக்கு மலரை கல்யாணம் செய்து வச்சுடறாங்க. இவங்க எப்படி வாழக்கையைத் துவாங்கறாங்கன்னு ஒரு சின்ன மைய புள்ளியை வச்சு, காவிய காதல் கதையை குடுக்கற மாதிரி, ஜவ்வு மாதிரி காதலை இழுக்கறாங்க பாருங்க.... ஐயோ முடியலை.

     இவள்தான் மனைவி

    இவள்தான் மனைவி

    ஒரு ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி இவன்தான் புருஷன், இவள்தான் மனைவி என்றாகிவிட்ட பிறகு, வாழக்கையை அவர்கள் மிக லேசாக எடுத்துக்கறாங்க. இல்லை ஒரு சவாலை எடுத்துக்கிட்டு கூட இயல்பா வாழத் தயாராகி, பிள்ளைகளைக் கூட பெற்றுவிடுகிறார்கள். இதை ஒரு சுமையாகவோ, அல்லது கஷ்டமாகவோ யாரும் நினைப்பதில்லை. இதற்குப் பிறகு அவர்களுக்கு தங்கள் குடும்பத்தை கவனிக்க ஓட்டத்துக்கு தயாராக வேண்டுமே என்று தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள்.

     வாழ்க்கையின் யதார்த்தம்

    வாழ்க்கையின் யதார்த்தம்

    வாழ்க்கையின் யதார்த்தம் இப்படி இருக்க, இந்த ஈரமான ரோஜாவே சீரியலில் ஒருவருக்குள் ஒருவர் லவ் வர வேண்டுமாம். வந்த லவ்வை சொல்ல, வெற்றி பழனி மலைக்கு யாத்திரை போறான். அங்கு ஒரு சித்தர் வந்து அருள் வாக்கு தர்றார். நீ காதலை மனைவியிடம் சொல்லலலாம் என்று. அவன் எப்போது காதலை சொல்லுவான் என்று தன் காதலை மறைச்சுக்கிட்டு காத்து கிடக்கா மலர்.

     காதலை மழையில்

    காதலை மழையில்

    கோயிலுக்கு மலரை பைக்கில் அழைச்சுட்டு போனவன், ரொம்ப சந்தோஷமா மலரோட திரும்பி வர்றான். வரும்போது மழையில் நனைஞ்சுக்கிட்டே ஜாலியா வர்றாங்க. காதலை சொல்லிக்கிட்டாங்களாம். குடும்பத்தில் வில்லிகள், மழையில ஜாலியா நனைஞ்சுக்கிட்டே வர்றாங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் காதலை சொல்லி இருப்பாங்களோன்னு பொருமறாங்க.

     விடிய விடிய பேசிக்கிறாங்க

    விடிய விடிய பேசிக்கிறாங்க

    விடிய விடிய அன்னிக்கு நான் லவ்வை சொல்ல வந்தப்போ நீ என்ன நினைச்சே.. அப்புறம் எதுக்கு என்கிட்டே கோச்சுக்கிட்டு பேசாம கிளம்பி போனே.. அப்போ உன் மனசில் என்ன ஓடிக்கிட்டு இருந்துச்சுன்னு பேசிக்கறாங்க பாருங்க.. கடவுளே...இதையும் பார்க்க வச்சு வேடிக்கை பார்க்கறியேன்னு இருக்குது.

     சுவீட் எடு கொண்டாடு

    சுவீட் எடு கொண்டாடு

    வீட்டில் தாத்தா, அப்பா, மாமா எல்லாரும் இந்த விஷயத்தை லட்டு சாப்பிட்டு கொண்டாடறாங்க. லவ்வை சொல்லிக்கிட்டாங்களாம். மலர் இந்த விஷயத்தை போன் போட்டு அம்மா, பாட்டி, தங்கையிடம் சொல்ல, அவங்களும் ஸ்பீக்கரில் போனை போட்டு பேசி மகிழறாங்க. எங்கே சென்று கொண்டு இருக்கிறோம் நாம்? இங்கிதம் தெரியாமல் சீரியல்கள் எடுத்து, மக்களை பார்க்க வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். வெரி பேட்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+