பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ஆர்யன்... "இதுதான்" காரணமா?.. மகிழும் ரசிகர்கள்!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து செழியன் கேரக்டரில் நடித்து வந்த ஆர்யன் "இதற்காக" தான் விலகிவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலை தினந்தோறும் மக்கள் பார்த்து வருகிறார்கள். இந்த சீரியலுக்கு குடும்பத் தலைவிகள் ஆஜராகிவிடுகிறார்கள்.
இது இல்லத்தரசிகளின் ஃபேவரைட் சீரியலாகவே இருந்து வருகிறது. வெளியே வேலைக்குச் செல்லாமல் வீட்டில் ஹவுஸ்ஃவைய்ப்பாக இருக்கும் பெண்கள் எத்தகைய கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்திக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்வதுதான் பாக்கியலட்சுமி.

செழியன் கதாபாத்திரம்
இந்த சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்து வந்தார். இவருக்கு அண்மையில்தான் ஷபானாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்த வாரம் முதல் இவருக்கு பதில் வேறு ஒருவர் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பாக போகிறது.

சீரியல்
இந்த நிலையில் ஆர்யன் ஏன் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார் என்பதற்கான காரணங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது விஜய் டிவியின் புது சீரியலாக கனா காணும் காலங்கள் 2 வெளியாகவுள்ளது. இந்த தொடர் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

பாக்கியலட்சுமி
இதில் நடிப்பதற்காகத்தான் ஆர்யன், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார் என சொல்லப்படுகிறது. அது போல் ஆர்யன் எப்போதும் லைவ் வீடியோவில் ரசிகர்களுடன் பேசுவார். அது போல் அவர் பேசும் போது பாக்கியலட்சுமியிலிருந்து ஏன் விலகினீர்கள் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆர்யன், அதை ஏன் ஞாபகப்படுத்துறீங்க என்றார்.

கனா காணும் காலங்கள் 2 ப்ரோமோ
எனவே அவர் நிச்சயம் கனா காணும் காலங்களில் கமிட் ஆகியிருப்பார் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த தொடருக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை விட இது மாணவர்கள், இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications