அந்த பிரபல நடிகை இவரா? சீனியர் நடிகர்கள்தான் காரணமா? சினிமாவில் எழுதப்படாத சட்டம்.. பிரபலம் ஓபன்டாக்
சென்னை: "திருமணமாகாமல் பல நடிகைகள் இன்னமும் தமிழ் சினிமாவில் உள்ளதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், மூத்த நடிகர்களுடன் ஜோடியாக நடித்தாலும்கூட சில நடிகைகள் வயதான கெட்டப்பை போடுவதில்லை" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "சினிமாவில் ஆண்களுக்கு ஒரு சட்டமும், பெண்களுக்கு ஒரு சட்டமும் இருக்கிறது.. ஹீரோக்களுக்கு திருமணமாகி குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும், சிறு பெண்களுடன்தான் ஜோடியாக நடிப்பார்கள். பொதுவாக ரஜினி உட்பட எல்லா நடிகர்களையும்தான் சொல்கிறேன்..

ஹீரோயின்கள்: ஆனால் ஹீரோயின்களுக்கு கல்யாணமாகிவிட்டால், அம்மா, அக்கா ரோல்தான் கிடைக்கிறது.. நயன்தாரா போன்றோர் இதில் விதிவிலக்காக இருந்தாலும், எந்த மாதிரியான கேரக்டரை நயன்தாரா சமீபகாலமாக எடுத்து நடிக்கிறார் என்பதையும் கவனிக்கணும். அப்படிப்பார்த்தால், திருமணத்துக்கு பிறகு அவருக்கு படங்கள் சரிவுதான்.. வயது மூப்பான கேரக்டரை தேர்ந்தெடுத்துதான் நடிக்க முடியுமே தவிர, பழைய மாதிரி அவரால், இளம்வயது ஹீரோக்களுடன் ஜோடி சேர முடியாது.
25 வயதில் ஹீரோ என்றால், அவருடன் நயன்தாராவால் ஜோடி சேர முடியாது. அதற்காக கவின் ஒன்றும் 25 வயதான நடிகர் இல்லையே. அப்படியே இருந்தாலும் இது விதிவிலக்குதான். நயன்தாரா போல மற்ற நடிகைகளுக்கு, இப்படியொரு வாய்ப்பு கிடைப்பதில்லை.
மூத்த நடிகைகள்: திருமணமாகாத மூத்த நடிகைகள் பலரும் இருக்கிறார்கள்.. இதுக்கு காரணம், இந்திய சினிமாவில் உள்ள சாபக்கேடுதான்.. தங்களுக்கு திருமணமாகிவிட்டால் மார்க்கெட் குறைந்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள்.. இதனால் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள, அட்ஜெஸ்ட்மென்ட், மற்றும் சில அந்தரங்க வீடியோக்களை லீக் செய்ய விடுவது போன்றவைகளால், இவர்களுக்கு மீடியாவில் ஓரளவு பரபரப்பு கிடைக்கும்.
ஆனால், யாருடன் ஜோடி சேர்ந்து நடித்தார்களோ, அவர்களுக்கே அம்மாவாக நடிக்கும் கொடுமையும் இங்கே நடக்கிறது.. இப்படி நடிக்கும் ஹீரோக்களுக்கும் மனசாட்சியே இருப்பதில்லை.. கேரளாவில் இப்படியொரு சிக்கல் கிடையாது.. மஞ்சுவாரியர் இன்னமும் முன்னணியில் நடித்து கொண்டுதான் இருக்கிறார்..
வாழ்க்கை தத்துவம்: 40 வயதாகியும் திருமணம் செய்யாமல் பலர் தமிழ் சினிமாவில் உண்டு.. அவரவருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி, தெளிவு போன்றவை காரணங்களால், இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கலாம். சிலருக்கு வாழ்க்கையின் தத்துவம் புரிந்துவிடுவதால், திருமணம் செய்து கொள்ளாமலேயே அப்படியே இருந்துவிடுகிறார்கள். கோவை சரளா போன்றோர் இப்படித்தான்.
பலகாலம் திருமணமாகாமல் உள்ள சிலருக்கு, தொழிலதிபர்களுடன் திருமணம் நடக்கலாம். அதேபோல, 35 வயதை கடந்துவிட்டால், மகப்பேறு சிக்கலும் பெண்களுக்கு உண்டு.. எல்லாருமே நயன்தாரா ஆகிவிட முடியாது..
நரைமுடி ஹீரோக்கள்: ரஜினி, கமல், விஜய் போன்றோர் எல்லாம் ப்ளே பாய் கேரக்டரில் தற்போது நடிக்க முடியாது.. நரைமுடியுடன் இந்த ஹீரோக்கள் நடித்தாலும், இவர்களுடன் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு வெள்ளை முடி இருப்பதில்லை. "லியோ" படத்தில் 20 வயது மகனுக்கு தாயாக திரிஷா நடித்தாலும், ஒரேயொரு வெள்ளை முடிகூட அவருக்கு தலையில் இருக்காது. 20 வயது மகனுக்குரிய தோற்றத்திலும் திரிஷா இருக்க மாட்டார்.
இப்படி மூத்த நடிகர்களுடன் நடிப்பதற்காகவே, சில நடிகைகள் திருமணமும் செய்வதில்லை. அப்படியே மூத்த நடிகர்களுடன் நடித்துவிட்டால், அதற்கு பிறகு, இந்த ஹீரோயின்களால் கீழே இறங்கி வந்து, சின்ன நடிகர்களுடன் நடிக்க முடிவதில்லை.. இப்படியும் ஒரு சிக்கல் நடிகைகளுக்கு உள்ளது...
கறார் கண்டிஷன்: அதேபோல, சில மூத்த நடிகர்கள், தங்களுக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு திருமணமாகியிருக்க கூடாது, அட்ஜஸ்ட்மென்ட் உள்ளிட்ட விஷயங்களிலும் கறாராக உள்ளதால், நடிகைகள் சிலர் திருமணம் செய்யாமல் உள்ளனர்" என்று தனிப்பட்ட முறையில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications