Roja Serial: ரசிகர்களை இவ்ளோ கேவலமாவா ஏமாற்றுவீங்க...?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தும் கூட அணு டைகர் மாணிக்கம் பொண்ணுதான்னு தீர்ப்பு வருது. அணுவுக்கு எதிரா உண்மைக்கு ஆதரவா வாதாடின அர்ஜுன் வழக்கம் போல தோற்றுவிட்டான்.

கடந்த ஒரு வருஷமா இழு இழுன்னு இழுத்து, இப்போ லாக்டவுன் அமலில் உள்ள நேரத்தில் இழுக்காமல் இருப்பாங்களா என்ன? இந்த நேரத்தை சீரியல் குழு தங்களுக்கு சாதகமா எடுத்துக்கிட்டு ஜவ்வு மாதிரி இழுத்து ரசிகர்களை கேவலமா ஏமாத்தி இருக்காங்க.

டிஎன்ஏ ரிப்போர்ட்டை அணு எப்படி மாத்தி வைக்கிறாள் என்று ஷூட் செய்ய நேரமில்லை என்றாலும், அணு ரிப்போர்ட்டை மாத்தி வச்சுட்டான்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க.

 வெப் சீரீஸ் தேவலை

வெப் சீரீஸ் தேவலை

ஒரேயடியா இப்படி இழுஇழுன்னு இழுத்தால் டொய் நூல் கூட அந்து போயிரும். இந்த ரீல் நூல் அந்து போகலைங்க. ரசிகர்கள்தான் நொந்து போறாங்க. இப்படி சீரியல் பார்ப்பதற்கு வெப் சீரீஸ் தேவலைன்னு வெப் சீரீஸ் பக்கம் ரசிகர்கள் கவனம் திசை திரும்பிருச்சு. ஒரே ரீலை எவ்ளோ நீளத்துக்குத்தான் இழுப்பீங்க?

 சரக்கு இல்லை

சரக்கு இல்லை

ரோஜா சீரியலுக்கு என்று தக்க வைத்து இருக்கும் ரசிகர்களை அப்படியே மெயின்டெயின் செய்து முட்டாளாக்கும் முயற்சியில் சீரியல் குழு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கதையை புதிதாக திசை திருப்பி ரசிகர்களை தக்க வச்சுக்க சரக்கு இல்லை போலும்.

 டிஎன்ஏ ரிப்போர்ட்

டிஎன்ஏ ரிப்போர்ட்

அணு எப்பேர்ப்பட்ட கைகாரியா இருக்கட்டுமே... டிஎன்ஏ ரிப்போர்ட் மாற்றி வைத்து விடுவாள்...எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒரு கிரிமினல் லாயர் கவனமாக இருக்க மாட்டானா? இப்படியா கோட்டை விடுவான்? இப்படிப்பட்ட சீரியல்கள் எடுத்து மக்களின் நம்பிக்கையை பொய்யாக்குவதோடு.. அவர்களை கேவலமாக ஏமாற்றியும் வருகிறது இப்படிப்பட்ட சீரியல்கள்.

 நேரத்தின் முக்கியம்

நேரத்தின் முக்கியம்

நேரத்தின் முக்கியத்துவம் பற்றி மக்கள் அறியாதவாறு இப்படி மக்களை முட்டாளாக்கி காசு பார்க்கும் சீரியல்கள் 1000 எபிசோட் 2000 எபிசோட் 3000 எபிசோட் என்று நீண்டு கொண்டே செல்வதை ஒரு சாதனையாக சொல்லி கொண்டாடிக் கொள்வார்கள்.. தவிர அவர்களே தங்களை தாங்கள் திரும்பி பார்த்தால் அதில் அவர்கள் சொல்லி இருப்பது என்ன என்கிற உண்மையை உணராமல் முன்னோக்கி செல்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+