Gorgeous: கோட் சூட் டூ பட்டு வேட்டி சட்டை! யார் வீட்டு கிரகபிரவேசத்திற்கு சென்றார் முதல்வர் விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோட் சூட் காஸ்ட்யூமில் இருந்து பட்டு வேட்டி, சட்டைக்கு முதல்வர் விஜய் மாறியது ஏன், யாருடைய வீட்டு கிரகவேசத்திற்கு அவர் சென்றிருந்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் என்றாலே வேட்டி-சட்டை என்ற கலாச்சாரத்தை பலர் பேன்ட் சட்டைக்கு மாற்றியிருக்கிறார்கள். ஆனால் முதல்வரான விஜய்யோ கோட் சூட்டிலேயே தினமும் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார்.

CM Vijay

பொதுவாக இசை வெளியீட்டு விழாவுக்கெல்லாம் சாதாரணமாக உடை அணியும் அவர் மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சின் போது கோட் சூட் அணிந்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், நம்ம நண்பர் அஜித் மாதிரி ஸ்டைலா கெத்தா கோட் சூட்டில் வந்திருக்கிறேன் என்றார்.

அதே போல் முதல்வராக பதவியேற்பு விழாவுக்கும் அவர் கோட் சூட்டில் வந்திருந்தார். அதற்கு அடுத்த சட்டசபை நடவடிக்கைகளுக்கு சூட் இல்லாமல் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதற்கும் கோட் சூட் அணிந்து கொண்டே வந்தார்.

ஒரு முறை கோட்டையில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற போது மட்டும் மேல் கோட்டை நீக்கிவிட்டு வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட்டுடன் வந்துவிட்டார். ஒரு கட்டத்தில் முதல்வர் உடை என்ற பெயரில் இந்த உடை செட் விற்பனைக்கும் வந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் விஜய் பட்டு வேட்டி சட்டையில் தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தார். இதுவும் ஒரு காஸ்ட்யூமா என ஊழியர்கள் எண்ணிய நிலையில்தான் அவர் ஒரு விழாவுக்கு சென்றுவிட்டு அப்படியே தலைமைச் செயலகத்திற்கு வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

அதாவது விஜய், புதுமனை புகுவிழாவிற்கு சென்றுவிட்டு நேராக அலுவலகத்திற்கு வந்துவிட்டாராம். யார் வீட்டு அலுவல் என்ற கேள்வி இணையம் முழுக்க எழுந்தது.

அப்போதுதான் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷின் வீட்டு கிரகபிரவேசம் என தெரியவந்தது. ஜெகதீஷ் பழனிசாமி, நீலாங்கரையில் ஒரு வீடு கட்டியிருக்கிறாராம். அந்த வீட்டு விழாவுக்குத்தான் விஜய் சென்றிருக்கிறார். அங்கு அவரை பார்த்தவுடன் ஜெகதீஷ் வீட்டு உறவினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். ஜெகதீஷின் உறவினர் பெண் ஒருவர் ஓடிவந்து விஜய்யை பாசமாக கட்டி அணைத்தார். ஜெகீஷின் அம்மாவா என தெரியவில்லை.

யார் இந்த ஜெகதீஷ்?

விஜய்யின் மேலாளராக இவர் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். விஜய்யின் மேலாளர் மட்டுமின்றி ரூட் எனும் பிரபல மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் இவர் வைத்து நடத்தி வருகிறார்.

தமிழ் சினிமா வட்டாரத்தில் 'ஜெகதீஷ்' என்றாலே இவர்தான் பலருக்கும் நினைவுக்கு வருவார்.

இவர் நடிகர் தளபதி விஜய் அவர்களின் நீண்டகால மேலாளராக (Manager) பணியாற்றியவர்.

தற்போது 'தி ரூட்' (The Route) என்ற செலிபிரிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மேலும், 'மாஸ்டர்', 'லியோ' போன்ற படங்களின் இணை தயாரிப்பாளராகவும், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரிவால்வர் ரீட்டா' போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் சினிமா துறையில் பெரும் பிரபலமாக வலம் வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+