கணவரோடு ஹனிமூன் போன இடத்தில் ரித்திகா வெளியிட்ட திடீர் வீடியோ.. இந்த நேரத்தில் இது தேவையா?
சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த விஜய் டிவி பிரபலமான ரித்திகா தன்னுடைய கணவரோடு மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று இருக்கிறார்.
ஹனிமூன் சென்ற இடத்தில் கடற்கரையில் இவர் செய்த செயலைப் பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ராஜா ராணி சீரியல் வினோதினி
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக ரித்திகா தமிழ் சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார். அதுவும் அந்த சீரியலில் மூணாவது வினோதினியாக கதாநாயகனின் தங்கை கேரக்டரில் இவர் நடித்திருப்பார். ஏற்கனவே இரண்டு கதாநாயகிகள் அந்த சீரியலில் மாற்றப்பட்ட நேரத்தில் மூன்றாவதாக இவருடைய அறிமுகம் கிடைத்தது. ரித்திகாவின் நிஜமான பெயர் தமிழ் செல்வி தானாம். இவருடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். ஸ்கூல், காலேஜ் எல்லாமே ரித்திகா கோயம்புத்தூரில் தான் படித்திருக்கிறார். இவர் பி ஏ தமிழ் படித்திருக்கிறாராம் இவருக்கு எம்எஸ்சி சாஃப்ட்வேர் சிஸ்டம், எம்பில், பிஹெச்டி எல்லாமே படிக்க வேண்டும் என்று தான் ஆசையாக இருந்ததாம். படிப்பில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்று ஆசையாக இருந்த இவர் நடிப்பிற்கு வந்திருக்கிறார்.

குடும்ப கஷ்டம்
படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாலும் ரித்திகா பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதே வீட்டில் பணக்கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் இவர் பார்ட் டைம் வேலை பார்க்க தொடங்கியிருந்தாராம். ஆரம்பத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு லோக்கல் சேனலில் இவர் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். அதன் மூலமாக பல லைவ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறாராம். அப்போதே ரசிகர்களோடு இவர் பழகி இருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர் விஜே வாக வேண்டுமென்று வாய்ப்பு தேடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் இவருக்கு மும்பையில் ஒரு வேலை கிடைக்க இவர் அங்கே சென்று விட்டாராம். இரண்டு வருடம் வேலை பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வரும்போது இவருக்கு ராஜா ராணி சீரியலில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்ததாம்.

பாக்கியலட்சுமி அமிர்தா
ராஜா ராணி சீரியலில் இவருடைய நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவருக்கு சாக்லேட் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தற்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் அமிர்தா கேரக்டரில் நடித்து வருகிறார். ஆனாலும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை வாங்கி கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2 தான். இந்த நிகழ்ச்சியில் இவர் ஒரு வைல்ட் கார்டாக அறிமுகமாகியிருந்தாலும் இவருடைய மொக்கை காமெடியும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது தான். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போல இருக்கும் இவருடைய எதார்த்தமான நடிப்பு பலருக்கும் பிடித்து விட்டது. ஆனால் இப்ப வரைக்கும் இவரிடம் நடிப்பு முக்கியமா? அல்லது விஜே முக்கியமா? என்று கேட்டால் நான் விஜேவாக வருகிறேன் என்று இவர் சொல்லி விடுவாராம்.

கடற்கரை வீடியோ
இந்த நிலையில் ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் ரித்திகாவிற்கு திருமணம் முடிந்துள்ளது. விஜய் டிவியில் வேலை செய்யும் வினோத் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கேரளாவில் இருந்து வரும் ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் இப்போதும் வரவில்லை. இந்த நிலையில் தன்னுடைய கணவரோடு இவர் மாலத்தீவுக்கு ஹனி முன் சென்றிருக்கிறார். தான் எங்கே சென்றாலும் அங்கே எதார்த்தமான போட்டோஸ் வீடியோக்களை எடுத்து வெளியிடும் ரித்திகா தற்போது மாலத்தீவில் கடற்கரையில் சிப்பிகளை பொறுக்கும் வீடியோவை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஹனிமூன் சென்ற இடத்தில் இப்படியா பண்ணுவாங்க என்று சிலர் கேள்வி எழுப்ப, அங்கே இங்கே புயல் மழை வருகிறது. இந்த நேரத்தில் கடற்கரையில் இந்த விளையாட்டு தேவையா? ரித்திகா பத்திரமா வீடு வந்து சேருங்க என்று பக்குவமாக கமாண்டுகளில் அறிவுரை கூறுகிறார்கள். மீண்டும் எப்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலுக்கு வருவார் என்பது பலருடைய கேள்வியாகவும் இருந்து வருகிறது.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications