அந்த நடிகை ரூமில் தாக்கினாரா? "என் இனிய தமிழ் மக்களே" பாரதிராஜாவை வளைத்த பெண்கள்? இதெல்லாம் உண்மையா?
சென்னை: என் இனிய தமிழ் மக்களே என்று சொல்லிவிட்டு, ஒரு தமிழச்சியை கூட பாரதிராஜா கதாநாயாகியாக்கியது இல்லை.. பூரா ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலிருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான். ஏன்? தமிழ் பெண்களிடம் அழகு, அறிவு இல்லையா? அவர்களுக்கு நடிக்க தெரியாதா?" என்று தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் காட்டமாக கேட்டுள்ளார்.
BBT யுடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் டைரக்டர் பாலா பற்றி பேசும்போது, "பாலா ஒருவிதமான சைக்கோ மனநிலைமை உடையவர்.. பரதேசி படத்தில் தன்னுடைய வயதுக்கு மூத்தவர்களை எல்லாம் திட்டறார், அடிக்கிறார் பாலா.

சாப்பாடு: ஒருநாள் உதவி இயக்குனர்கள் பகலில் சாப்பிட முடியாமல், இரவு 12 மணிக்குதான் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். இதையறிந்த பாலா, சாப்பிடும் இடத்துக்கு சென்று, அங்கு எல்லாரையும் அடிக்கிறார், மிதிக்கிறார்.. சாப்பாட்டை தூக்கி எறிகிறார்.. ஏனென்றால், இவர் இன்னும் சாப்பிடலயாம். டைரக்டர் சாப்பிடாமல், உதவி இயக்குனர்கள் சாப்பிடுகிறார்களே? என்ற கோபத்தை அங்கு காட்டுகிறார்.
சேது படம் எடுப்பதற்கு முன்பு, பாலுமகேந்திராவிடம் வேலையாளாக இருந்தவர்தான் பாலா.. பாலு மகேந்திரா ஜூனியர்கள் எல்லாருமே மனநோயாளிகளாகத்தான் இருப்பார்கள். சீமான், பாலா, உட்பட இவங்க யாருமே சராசரியாக இருக்க மாட்டாங்க.
இவர்கள் எல்லாருமே தங்களை பிரம்மாவாக நினைத்து கொள்வார்கள்...
பாரதிராஜா: பாரதிராஜாவால், திரைப்பட உலகத்தில் பல பெண்களை பாலியல் தீதியாக பயன்படுத்தி கொண்டு அனுப்ப விடுவாராம்.. என்னுடைய நண்பர் ஒருமுறை சொன்னார், 'பாதிக்கப்பட்ட நடிகைகள் ஒருநாள் அறைக்குள், பாரதிராஜாவை தாக்கினார்களாம்.. அப்போது என்னுடைய நண்பரே பலமுறை அந்த தாக்குதலை தடுத்திருக்கிறாராம்.
என் இனிய தமிழ் மக்களே என்றுசொல்லிவிட்டு, ஒரு தமிழச்சியை கூட இவர் கதாநாயாகியாக்கியது இல்லை.. ராதா, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, இவங்கெல்லாம் யாரு? ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலிருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான். ஏன்? தமிழ் பெண்களிடம் அழகு, அறிவு இல்லையா? அவர்களுக்கு நடிக்க தெரியாதா? இதுபோன்றவர்கள் முகம், பாலாவை முகத்தை போல கொடூரமான முகம்" என்று தெரிவித்துள்ளார்.
அம்பிகா, ராதா: சில நாட்களுக்கு முன்புகூட, Kingwoods News என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்திருந்தார் அந்த பேட்டியில், நடிகைகள் அம்பிகா, ராதா இருவருமே எப்படி திரைத்துறையில் அசுர வளர்ச்சி பெற்றார்கள்? என்பது குறித்து விலாவரியாக கூறியிருந்தார.
அப்போது பாரதிராஜாவை பற்றி கூறும்போது, "அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக ஹீரோயின் தேடி கொண்டிருந்தார் பாரதிராஜா.. அம்பிகாவுக்கு இன்னொரு தங்கை இருப்பதாக சொல்லவும், , திருவனந்தபுரம் செல்கிறார்.. 9வது படிக்கும் 14வயதுடைய உதயசந்திரிகாவை பாரதிராஜா சந்திக்கிறார்..
ஹீரோயின்: 8 கோடி பேர் உள்ள தமிழ்நாட்டில் தமிழச்சியே கிடைக்காமல், திருவனந்தபுரம் சென்றவர் பாரதிராஜா.. "என் இனிய தமிழ் மக்களே" என்று படத்துக்கு படம் சொல்லிவிட்டு, கேரளாவிலிருந்து ஹீரோயினை அழைத்து வருகிறார். உதயசந்திரிகாவுக்கு ராதா என்று பெயரை வைக்கிறார்.. மலையாள மக்களும் இந்த பெயரை ஏற்றுக் கொண்டார்கள்.
ராதா விஷயத்தில் மட்டுமே நிறைய சிரமங்களை எடுத்துக் கொண்டவர் பாரதிராஜா.. இதற்கு பிறகு, ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு ராதாவை அறிமுகப்படுத்தியது பாரதிராஜாதான்.. அதற்கு விலையாகவே ஏஆர்எஸ் கார்டன் தரப்பட்டது" என்றெல்லாம் அந்த பேட்டியில் தமிழா தமிழா பாண்டியன் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications