அந்த வார்த்தை கேட்குறாங்க! பாண்டியன் ஸ்டோரை விட்டு விலகுவதற்கு காரணம் இதுதான்.. காவியா விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இரண்டாவதாக முல்லை கேரக்டரில் நடிகை காவியா அறிவுமணி நடித்து வந்தார்.
இந்த நிலையில் அந்த சீரியிலில் இருந்து திடீரென்று காவியா அறிவுமணி விலகி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் எதற்காக தான் சீரியலை விட்டு விலகினேன் என்று காவியா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இரண்டாவது முல்லை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று நடிகர்கள் மாறுவது ஒன்றும் புதியது அல்ல. அது அடிக்கடி நடந்து கொண்டிருப்பது தான். அந்த மாதிரி தான் முல்லை கேரக்டரில் இரண்டாவது முல்லையாக நடித்த காவியா அறிவுமணி திடீரென்று இந்த சீரியலில் விட்டு விலகி இருந்தார். அதற்கான என்ன காரணம் என்று ஆரம்பத்தில் கூறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கிடைத்த வாய்ப்பு: அதில் எனக்கு புதியதாக திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் எனக்கு சின்னத்திரையா? வெள்ளித்திரய்யா? என்று பார்த்தால் வெள்ளி திரையில் என்னுடைய திறமைகளை புதியது புதியதாக ரசிகர்களிடம் நிரூபிப்பது எனக்கு பிடித்தது. எனக்கு வாய்ப்பு கிடைத்த போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் முயற்சி செய்தேன் என்று கூறியிருக்கிறார்.

காரணம் அது இல்லை: ஆனால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து முல்லை கேரக்டரில் காவியா விலகியதற்கு காரணம் கதிரோடு சேர்ந்து அதிகமான நெருக்கமான காட்சிகள் இருந்ததால் அதிலிருந்து விலகி விட்டார் என்றும் இவருடைய கேரக்டருக்கு அதிகமான முக்கியத்துவம் இல்லை அதனால் விலகி விட்டார் என்றும் பல்வேறு வதந்திகள் கிளம்பி வந்தது. ஆனால் அது குறித்து மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அந்த மாதிரி எல்லாம் நான் விலகவில்லை, கதைக்கு தேவை என்றால் நாம் செய்ய தான் செய்வோம்.
முக்கியத்துவம் முக்கியம்: வெள்ளி திரையில் நடிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கிறது. அது எனக்கு நிறைவேற வாய்ப்பு கிடைத்ததும் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். வேறு ஒன்றும் இல்லை. என்னிடம் வெளியே செல்லும் போதெல்லாம் அதிகமானோர் எதற்காக உங்களுக்கு கிடைத்த வரவேற்பை விட்டு விட்டீர்கள் என்று கேட்கிறார்கள். சின்னத்திரையிலும் சரி வெள்ளி திரைகளும் சரி நடிக்க தான் செய்கிறோம். அதனால் எங்கே முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறதோ அங்கே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications