அவசர அவசரமாக பிரியங்காவுக்கு 3வது கல்யாணம்.. காரணமே இதுதான்.. விஜய் டிவி டோட்டல் கமர்ஷியல்: பிரபலம்
சென்னை: விஜய் டிவி பிரியங்காவின் கல்யாணத்தை தனி நிகழ்ச்சியாக ஒளிபரப்புவார்கள் என்றே தெரிகிறது.. அதனால்தான் கல்யாண வீடியோகூட சில விநாடிகள் மட்டும் இதுவரை வெளியாகியிருக்கிறது.. விஜய டிவி என்றாலே அது டோட்டல் கமர்ஷியல்" என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், பிரியங்காவுக்கு நடந்துள்ளது 3வது திருமணம் என்று தன்னுடைய பேட்டிகளில் தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
Fine Tamil Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "பிரியங்கா முதல் கணவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றவர்.. மாப்பிள்ளை வசிக்கும் இது 2வது திருமணம்.. அவருக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் லண்டனில் உள்ளது.. 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால், மனைவியுடன் விவாகரத்து ஆகிவிட்டதாக சொல்கிறார்கள்..

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார் கிறிஸ்டியனை திருமணம் செய்தபோது, அந்த கணவரின் மனைவி பின்னாடியே பதறியடித்து ஓடிவந்தார்.. தன்னை விவாகரத்து செய்யாமலேயே, கணவர் வனிதாவை திருமணம் செய்வதாக புகார் சொன்னார்..
அதாவது, இன்றைய உலகில் எது நடந்தாலும், அதனை மீடியாவில் மறைக்க முடியாது.. அப்படியிருக்கும்போது, முறைப்படி விவாகரத்து பெற்றுதான் திருமணங்களை இப்போது செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் பிரியங்கா இன்று மிகவும் பிரபலமானவர்.. வசியும் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானவர்.. எனவே, முறைப்படியே இந்த திருமணம் நடந்துள்ளது.
இது 3வது திருமணம்
2016-ல் திருமணம் நடந்தது பிரியங்காவுக்கு.. அதுக்கு முன்னாடி சித்திக் என்பவரை திருமணம் செய்து பிரியங்காவுக்கு விவாகரத்தாகி விட்டது. 2022-ல் 2வது விவாகரத்தும் நடந்துவிட்டது. ஆனால், பிரியங்காவின் எல்லா பேட்டிகளிலுமே, வசி தனக்கு 6 வருட பழக்கம், நெருங்கிய நட்பாக இருந்தோம் என்று சொல்லி வருகிறார்.. அப்படியானால், 2வது கணவருடன் இருந்தபோதே, வசியுடன் நட்பு இருந்ததா தெரியவில்லை. எனினும், வெளிநாடுகளில் வசி நடத்திய எல்லா நிகழ்ச்சிகளுக்குமே பிரியங்கா சென்று வந்துள்ளார்..
தன்னை சுற்றியிருப்பவர்களை எப்போதுமே பிரியங்கா சந்தோஷமாக வைத்துக் கொள்வது, தனக்கு பிடித்திருப்பதாக வசி சொல்கிறார்.. வசி சொல்வது 100 சதவீதம் ஏற்புடையதே.. எப்போதுமே தன்னை சுற்றிலுமே அனைவரிடமும் கலகலவென பேசி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார் பிரியங்கா.. இலங்கையில் பிறந்து வளர்ந்த வசி, லண்டனில் பணிபுரிகிறார்.. கனடா போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டால் அவர்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கும் என்பதால், அங்கேயே செட்டில் ஆகிறார்கள்.
அதென்ன அஜித் மாதிரி?
பிரியங்காவின் இந்த அவசர கல்யாணத்தை நடத்தியதே விஜய் டிவிதான்.. அங்குதான் கல்யாணமே நடந்துள்ளது.. இந்த கல்யாண வீடியோவை பார்க்கும்போதே ஒரு நாடகத்தனம் தெரிகிறது..
வசியின் நிறைய வீடியோக்களில் அவர் தன்னுடைய தலைக்கு டை அடித்திருப்பார்.. ஆனால், இந்த கல்யாணத்தில் சால்ட் & பெப்பர் மட்டுமல்ல, டிரஸ்ஸிங், ஹேர்ஸ்டைல் முதல் எல்லாமே அஜித் போலவே இருக்கிறார்.. அஜித் பேட்டர்னிலேயே காணப்பட்டார் வசி..
டோட்டல் கமர்ஷியல்
விஜய் டிவியை பொறுத்தவரைக்கும் டோட்டல் கமர்ஷியல்.. அதனால், கல்யாணத்தையும் இப்படி நாடகத்தனமாக ஷூட் செய்திருக்கிறது.. மணமகள் குத்தாட்டம் போட்டுள்ளார்.. பாவனி, அமீர், நாஞ்சில், ரியோ என எல்லாரும் சேர்ந்து குருப் போட்டோ, நடனம் ஆடியிருக்கிறார்கள்.. இதெல்லாம் சின்ன சின்ன வீடியோ, போட்டோவாக வெளியே வந்து, பிரியங்காவின் திருமண நிகழ்வை பார்ப்பதற்கான ஆர்வத்தை மக்களிடம் தூண்டிவிட்டுள்ளது.. இதைதான் விஜய் டிவி ஒளிபரப்பி, கமர்ஷியலாக்கும்.
விஜய் டிவி பிரியங்காவின் கல்யாணத்தை தனி நிகழ்ச்சியாக ஒளிபரப்புவார்கள் என்றே தெரிகிறது.. அதனால்தான் கல்யாண வீடியோகூட சில விநாடிகள் மட்டும் இதுவரை வெளியாகியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications