உதயநிதி ஸ்டாலின் அரெஸ்ட் செய்ததை சஞ்சீவ் வீடியோ எடுத்த காரணம்? நடிகர் ஜீவா ஓபன்.. குவியும் கமெண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷாவின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரம் மட்டுமல்லாமல் சினிமா உலகத்திலும் பெரிய விவாதமாக மாறியது. ஆனால் அந்த சம்பவத்தில் உதயநிதி கைது செய்த காட்சியை விட அப்போது நடிகர் சஞ்சீவ் வீடியோ எடுத்த விஷயம் தான் பெரிதாக பேசப்பட்டது. அது குறித்து நடிகரும் தவெக தொண்டருமான ஜீவா ரவி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உதயநிதி கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டிற்கு எதிரே வசிக்கும் நடிகர் சஞ்சீவ் அந்த பரபரப்பான தருணத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த அங்கிருந்து சில திமுக தொண்டர்கள் சஞ்சீவை நோக்கி கடுமையான வார்த்தைகளில் திட்டி தீர்ததனர். அதனால் சில நிமிடங்கள் அமைதியாக நின்று கொண்டிருந்த சஞ்சீவ் பிறகு அங்கிருந்து எதுவும் பேசாமல் வீட்டிற்குள் போய்விட்டார். ஜன்னல் வழியாக அவர் எடுத்த வீடியோக்கள் கூட இணையத்தில் அதிகமாக ட்ரோல் ஆகி கொண்டு இருக்கிறது.

Udhayanidhi Stalin Sanjeev vijay

நடிகர் ஜீவா ரவி பேட்டி

இந்த சம்பவம் குறித்து நடிகர் ஜீவா பேசும் போது, நானும், சஞ்சீவ், நடிகர் ஸ்ரீ எல்லோரும் சின்ன வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். சஞ்சீவ் என்னுடன் ரொம்ப நெருங்கிய நண்பன். அதனால ஒரு உரிமையோடு இந்த விஷயத்தை சொல்கிறேன். அந்த நாளில் (உதயநிதி கைது செய்த நாளில்) அவர் அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை எதிர் வீட்டில் வசிப்பதால் என்ன நடக்கிறது என்று பார்க்க நினைத்திருக்கிறாரோ அல்லது எதிர்க்கட்சி தலைவரை எதிர்க்கட்சியாகவே இவரும் நினைத்திருக்கலாம்.. ஆனால் ஒரு பெரிய அரசியல் தலைவரை கைது செய்யும் சூழ்நிலையில் நாமும் அங்கே நின்று பார்க்க வேண்டிய தேவை இல்லை அந்த இடத்தை அப்போது தவிர்த்து இருக்கலாம் என்பதுதான் என் கருத்து என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் கைது

இந்த விஷயம் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. ஒரு சிலர் நண்பராக இருந்தாலும் சஞ்சீவ் செய்தது தவறு என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் என்று அவரை பாராட்டுகின்றனர். இந்த கருத்தை கூறிய ஜீவா சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமான முகம். தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியலில் கூட சமீபத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு முன்பும் பல சீரியல்களில் நடித்திருந்தார்.

நடிகர் சஞ்சீவ் எடுத்த வீடியோ

வெள்ளித்திறையிலும் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிலும் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது ரவி மோகன் நடித்த மிருதன் திரைப்படம் தான். அந்த படத்தில் கூட முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சின்னத்திரை சினிமா என்று பிசியாக இருந்தாலும் அரசியலிலும் அவ்வபோது தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்.

சின்னத்திரை பிரபலம்

அதுபோல நடிகர் சஞ்சீவ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். விஜய்யின் நெருங்கிய நண்பராக இருப்பதால் பல படங்களிலும் அவருடன் நடித்திருக்கிறார். அதேபோல சீரியல்களிலும் பல வருடங்களாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவிலும் அடிக்கடி ட்ரோலில் சிக்கி விடுகிறார். குறிப்பாக விஜயை போலவே நடிக்கிறார், அவரை போலவே மேனலிசம் காட்டுகிறார் என்ற விவாதங்கள் அவரை சுற்றி வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போதும் விஜய் விஷயத்திலேயே சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சஞ்சீவ் பேச வேண்டும் என்றும் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+