பிரபல சீரியலை விட்டு விலகும் பிரியதர்ஷினி.. இனி இவருக்கு பதில் இவர்தானாம்..திடீர் முடிவுக்கு காரணம்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு என்னும் சீரியலில் நடித்து வந்த பிரியதர்ஷினி அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் பிரியதர்ஷினி நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் ஏற்கனவே நடித்து வந்த நம்ம வீட்டு பொண்ணு எனும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறாராம்.
பிரியதர்ஷினிக்கு பதிலாக அவர் நடித்த செல்வி கேரக்டரில் சின்னத்திரை நடிகை பானுமதி நடித்து இருக்கிறாராம்.

கோவிலில் ரொமான்ஸ்
விஜய் டிவியில் இரவு மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது அதிகமாக ரொமான்ஸ் சீன்கள் நடைபெறுவதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். கதாநாயகியை கதாநாயகன் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் நிலையில் அவரை எப்படியாவது சேர்த்து வைத்து விட வேண்டும் என்று குடும்பத்தினர் அனைவரும் முயற்சி செய்து கொண்டிருக்கும் போது சமீபத்தில் கோவிலில் வைத்து இவர்கள் கண்ணாம்மூச்சி விளையாட்டு விளையாடும் போது கதாநாயகன் கதாநாயகியை கண்டுபிடிக்க அவர்கள் இருவருக்கும் நடக்கும் ரொமான்ஸ் பார்வையை வைத்து ஒரு ப்ரோமோ வெளியானது இது சமீபத்தில் நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டது.

எதிர்நீச்சல் ரேணுகா
இந்த நிலையில் இந்த சீரியலில் பிரியதர்ஷினி செல்வி கேரக்டரில் நடித்து வந்தார். ஆனால் சமீபமாகவே அவருடைய எபிசோட்கள் அதிகமாக காட்டப்படுவதில்லை. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ரேணுகா கேரக்டரில் இவர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறார். முக்கியத்துவம் வாய்ந்த ரேணுகா கேரக்டரில் இவர் நடிப்பதால் இவருடைய நடிப்பை ரசிகர்கள் அதிகமாக பாராட்டி வருகின்றனர்.

இவருக்கு பதில் இவர்
இந்த நிலையில் திடீரென்று பிரியதர்ஷினி நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரியதர்ஷினி நடித்து வந்த செல்வி கேரக்டரில் அவருக்கு பதிலாக சின்னத்திரை நடிகை பானுமதி நடிக்க இருக்கிறார். பானுமதி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே சீரியலில் நடித்திருந்தார். அது மட்டும் அல்லாமல் திருமகள் என்கிற சீரியலிலும் நர்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார். இடைநிலையில் இன்றைய எபிசொட்டில் இருந்து பானுமதி நடிக்க இருக்கிறார்.

காரணத்தை சொல்லலையே
ஏற்கனவே நம்ம வீட்டு பொண்ணு எனும் சீரியலில் பிரியதர்ஷினிக்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில் தற்போது அவருடைய கேரக்டருக்கு அந்த அளவிற்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய அறிமுகத்தில் இருந்து இப்ப வரைக்கும் இவருக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற ஒரு தகவல்கள் பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல் எதிர்நீச்சல் சீரியலில் தொடர்ந்து நடித்து வருவதால் இவருக்கு கால் சீட்டு பிரச்சனை அதனால் தான் அவர் நடித்து வந்த சீரியலில் தொடர முடியவில்லை என்று ஒரு தரப்பு செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இதைக் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் பிரியதர்ஷினி வெளியிடவில்லை.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications