நெற்றியில் குங்குமம்.. கழுத்தில் மாலை.. காமாக்யா கோயிலுக்கு விசுக்னு ஓடிய தமன்னா.. காரணம் வேற போலயே
சென்னை: பிரபல நடிகை தமன்னா, இந்த குறிப்பிட்ட கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? அவருக்கு தோஷம் ஏதாவது உள்ளதா? திருமண தடையா? தமன்னாவுக்கு என்னதான் பிரச்சனை? என்று அவரது ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது?
அசாம் மாநிலத்தில் ஒரு கோவிலில் பெண் கடவுளின் பெண்ணுறுப்பை (யோனி) பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இந்த கோவிலில் வேறு எந்த ஒரு சாமி சிலைகளும் இல்லை. காமாக்யா என அழைக்கப்படும் இந்த கோவில் மட்டும் விசித்திரமாகவே பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த காமாக்யா கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக காணப்படுகிறது. அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரின் மேற்கில் இருக்கும் நீலாச்சல் குன்றில் இந்த கோயில் அமைந்திருக்கிறது. அதாவது, கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ தொலைவில் நீலாச்சல் என்ற மலையில் 700 அடி உயரத்தில் இந்த காமாக்யா கோவில் உள்ளது..
சக்தி பீடங்கள்: முன்பெல்லாம் இந்த கோயிலில் நரபலி கொடுக்கும் வழக்கங்கள் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. சக்தி பீடங்கள் என்பது சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களை குறிப்பவை ஆகும். இதில், சக்தியின் யோனி விழுந்த இடம் தான் இந்த காமாக்யா கோவில் எனப்படுகிறது.
இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்யும்போது, பெண்கள் பூப்பெய்வது, குழந்தைப்பேறு பாக்கியம், திருமண தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த கோவிலுக்கு சென்று. பிரபல நடிகை தமன்னா சென்று சில நாட்களுக்கு முன்பு, வழிபாடு நடத்தியிருக்கிறார்.. எதற்காக இந்த கோயிலுக்கு தமன்னா சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை: King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "அமலாக்கத்துறையினர் தமன்னாவிடம் 5 மணி நேரம் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்..இந்த விசாரணைக்கு பிறகு தமன்னா மீது குற்றமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.. விசாரணையிலிருந்து நேராக காமாக்னி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

அந்த கோவில் காமசூத்ரா கோவில் என்பது பலரது கணிப்பாக உள்ளது. அப்படியிருக்கும்போது, கோவிலுக்கு தமன்னா சென்றதற்கான காரணம் என்ன என்று யாருக்கும் புரியாத மர்மமாக இருக்கிறது. தமன்னா ஏற்கனவே தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்வதாக இருப்பதும், ஆனால், அந்த திருமணம் இன்னும் நடைபெறாமல் இருப்பதும் இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது" என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
விசாரணை: சமீபத்தில், மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியான "பேர்ப்ளே" என்ற விளம்பரத்தில் நடித்திருந்தார் தமன்னா. இது ஒரு சட்ட விரோத செயலியாகும். அதுமட்டுமல்லாமல், இந்த செயலி மீது கடந்த ஆண்டில் பண மோசடி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அது குறித்த விசாரணை நடந்த நிலையில், அந்த செயலி சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகை தமன்னாவுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த விசாரணைக்காக, அசாமிற்கே நேரடியாக சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியிருந்தார் தமன்னா.. அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், தமன்னாக எதிராக குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்று உறுதிபட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.. இதையடுத்தே தமன்னா காமாக்யா கோவிலுக்கு, தன்னுடைய பெற்றோருடன் சென்றிருக்கிறார்.
என்ன காரணம்: தமன்னாவுக்கு தோஷம் உள்ளதா? அல்லது திருமண தடையா? என்று உறுதியாக தெரியாத நிலையில், தமன்னா கோயிலுக்கு சென்று வழிபடும் இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த கோவிலுக்கு கடந்த ஜனவரி மாதமும் தமன்னா தன்னுடைய பெற்றோருடன் இதே கோயிலுக்கு வந்திருந்தார்.. தன்னுடைய பெற்றோர் உறவினர்கள் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களை, அப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் தமன்னா..
அதுமட்டுமல்லாமல் "எனது அன்புக்குரியவர்களுடன் புனிதமான தருணங்கள்" என்றும் அவர் கேப்ஷனாக தன்னுடைய கோயில் போட்டோக்களையும் பதிவு செய்திருந்தார். இப்போது மீண்டும் அதே கோயிலுக்கு தமன்னா பெற்றோருடன் வந்து சென்றுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications