மே 4 பிறந்தநாளை திரிஷா முன்னமே கொண்டாட காரணம் இதுதானா? போல் ரிசல்ட் வெளியானதும் வந்த கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திரிஷா தன்னுடைய பிறந்தநாளை தன் நண்பர்களுடன் முன்னமே கொண்டாடி இருந்தார். இது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது. திரிஷாவின் பிறந்தநாள் மே நான்காம் தேதி தான் ஆனால் அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பே திரிஷா பிறந்த நாளை கொண்டாடி விட்டாரே என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இதுகுறித்து இப்போது ஒரு புது தகவலும் பரவி வருகிறது.

Trisha Vijay Tamil Cinema

முன்கூட்டியே பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகை திரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நெருங்கிய தோழிகளுடன் சேர்ந்து சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தி இருந்தார். அந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள், "Happy Birthday Queen", "Advance Wishes" என்று வாழ்த்துகளை குவித்தனர். குறிப்பாக, எந்த வித ஆடம்பரமும் இல்லாமல், மிகவும் எளிமையாக நண்பர்களுடன் கொண்டாடிய விதம் பலருக்கும் பிடித்திருந்தது.

Trisha Vijay Tamil Cinema

இன்ஸ்டா பதிவுகள்

திரிஷா என்ன போஸ்ட் போட்டாலும் அது வைரல் ஆகும் என்பது அனைவருக்கும் தெரியும். காரணம், சமீப காலமாக அவர் மீது வந்த வதந்திகள் மற்றும் சர்ச்சைகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், சின்ன சின்ன ஸ்டோரி, quote, அல்லது casual post மூலமே பதிலடி கொடுத்து வருகிறார்.

இதனால், "இன்று திரிஷா என்ன பதிவிடுகிறார்?" என்று ரசிகர்களும், நெட்டிசன்களும் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

Trisha Vijay Tamil Cinema

தேர்தலுக்கு இன்றைய கருத்து கணிப்புமுடிவுகள்

இந்நிலையில், 2026 தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியானது, அதில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சி மூன்றாவது இடத்தை பிடித்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் சிலர் புதிய கோணத்தில் பேச ஆரம்பித்துள்ளனர்.

"திரிஷா, விஜய்யின் நெருங்கிய நண்பர் என்று அனைவருக்கும் தெரியும். தற்போதைய தேர்தலில் கூட தான் வாக்கு செலுத்திய போட்டோவை தன்னுடைய சோசியல் மீடியாவில் திரிஷா பதிவிடும் போது அதில் கில்லி படத்தில் இடம்பெற்ற அர்ஜுனரு வில்லு என்ற பாடலை பயன்படுத்தி இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் நான் விஜய்க்கு தான் ஓட்டு போட்டேன் என்று திரிஷா சிம்பாலிக்காக சொல்கிறாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.

இப்படியிருக்க, தேர்தல் முடிவு வெளியாகும் நாளான மே 4-ம் தேதி தான் திரிஷாவின் பிறந்தநாள். அன்றைக்கு விஜய் தோல்வி அடைந்தால் சோகமாக இருப்பார் என்பதை முன்கூட்டியே தெரிந்ததால், தன்னுடைய கொண்டாட்டத்தை முன்னதாகவே செய்து விட்டாரா?" என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

நெட்டிசன்களின் கற்பனைக்கு எல்லையில்லை

சிலர் இதை சுமாரான coincidence என்று எடுத்துக்கொள்ளும் நிலையில், இன்னொரு தரப்பு இதை பெரிய "connection" போல பேச ஆரம்பித்துள்ளனர். "விஜய் result-ஐ திரிஷா முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டாங்களா?", "அதனால திரிஷா celebration advance-ஆ வைத்தாங்களா?" என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

உண்மை என்ன?

ஆனால் உண்மையில், இதற்கெல்லாம் எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, நட்பு, சமூக நிகழ்வுகள் இவை எல்லாம் சேர்ந்து நெட்டிசன்களின் கற்பனையில் பல கதைகளாக மாறுவது புதிய விஷயம் அல்ல.

திரிஷா முன்கூட்டியே பிறந்தநாள் கொண்டாடியது ஒரு சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் அதற்கே அரசியல் இணைப்பு கொடுத்து பேசுவது தான் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.

மொத்தத்தில், த்ரிஷாவின் ஒரு சாதாரண birthday celebration கூட சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறிவிட்டது. உண்மையா? கற்பனையா? என்பதைக் காட்டிலும், ரசிகர்களின் ஆர்வமும், நெட்டிசன்களின் கற்பனையும் தான் இங்கே அதிகமாக பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+