எனக்கு பொண்ணு பார்த்தாலே இப்படி ஆகிடுது... காரணத்தை பகிர்ந்த காளையன்.. பீல் பண்ணும் 90ஸ் கிட்ஸ்
தனக்கு இதுவரைக்கும் திருமணம் ஆகாத காரணம் இதுதான் என காளையன் பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை : குக் வித் கோமாளி சீசன் நான்கில் ஒரு குக்காக இருக்கும் காளையன் தன்னுடைய திருமண விஷயத்தைப் பற்றி சிவாங்கி இடம் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தனக்கு பெண் பார்த்தால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவரோடு திருமணம் நடந்து விடுகிறது என்று காளையன் உருக்கமாக பேசி இருக்கிறார்.
90ஸ் கிட்ஸ்கள் பலரும் தங்களுக்கு இதே பிரச்சனை இருப்பதாக காளையனுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார்கள்.

திரைப்படங்களில் வில்லன்
குக் வித் கோமாளி சீசன் நான்கில் தான் இதுவரைக்கும் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை பற்றி காளையன் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக காளையன் அறிமுகம் ஆகி இருக்கிறார். தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி கொண்டிருப்பவர் தான் காளையன். இவர் சுல்தான், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் கலகலப்பு
தற்போது காளையன் சின்ன திரையில் அறிமுகம் ஆகி இருக்கும் நிலையில் குக் வித்
கோமாளி நிகழ்ச்சியில் புகழ், ஜி பி முத்து, குரோஷி ஆகியோரை இவர் அடித்து உதைத்து செய்யும் காமெடி எல்லாம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கோமாளிகளும் அவரிடம் அடி வாங்குவதையே ஒரு கண்டென்டாக மாற்றி வருகிறார்கள். கடந்த வாரத்தில் கூட இவரை ஜிபி முத்து திட்டி பிறகு ஜிபி முத்து இவரிடம் மாட்டிக் கொண்டு இவர் அடித்து துவம்சம் செய்த எபிசோடுகள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நிஜத்தில் நண்பர்கள்
பார்ப்பதற்கு கரடு முரடாக பார்த்தாலே ரகடுபயாக இருக்கும் காளையன் நிஜத்தில் ஒரு குழந்தைத்தனமானவர் தான் என்று ஜிபி முத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கூறியிருந்தார். அது மட்டும் அல்லாமல் புகழ், சிவாங்கி என பலரும் காளையன் குறித்து அவரோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பல தகவல்களை கூறி வருகின்றனர்.

திருமணம் ஆகவில்லை
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி காளையனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீங்கள் இளமையாக இருந்தபோது உங்கள் பின்னால் பெண்கள் சுற்றினார்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு காளையன் ஆமாம்.... ஆனால் நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. காரணம் நான் ஒரு பெண்ணை ஓகே சொன்னால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விடுகிறது. அதனால் தான் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு சிவாங்கி ஷாக் ஆகி இருக்கிறார். ஆனால் 90ஸ் கிட்ஸ்கள் பலரும் எங்களுக்கும் இதே பிரச்சனை தான் இப்ப வரைக்கும் இருந்து வருகிறது. நீங்க எங்க இனம் தலைவரே என்று கூறி வருகிறார்கள்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications