ஜனனியின் காதல் பார்வை.. மக்கு.. மட சாம்பிராணி ஏண்டா உனக்கு புரியலை?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் காதலியை விடவும் மனம் இல்லாமல் கட்டிக்கிட்ட மனைவியையும் தொட முடியாமல் தவிக்கறான் சந்தோஷ்.
சக்தின்ற பொண்ணை காதலிச்ச சந்தோஷுக்கு, கல்யாணம் பண்ணியாக வேண்டிய நிலைமையில, கூட படிச்ச, அதோட மூத்த மருமகளின் உறவுக்கார பெண் ஜனனியை கட்டி வைக்கறாங்க.

சக்தி வெளியூர் போயிருப்பதால், அவளிடம் தெரிவிக்க முடியாத நிலைமை .. சந்தோஷும் கல்யாணம் செய்துக்கறான். ஆனா, சந்தோஷும், ஜனனியும் டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு முடிவு செய்யறாங்க.

ஜனனி வீட்டில் எல்லார் மனசிலயும் இடம் பிடிச்சுடறா. சந்தோஷ் தனக்கு வேணும்னு அவ மனசு நினைக்குது. சந்தோஷ் இருதலை கொல்லி எறும்பா தவிக்கறான்.

ஜனனிக்கு அம்மை போட்டுடுது... சந்தோஷ்தான் ஜனனியை கவனிச்சுக்கறான். தண்ணியில வேப்பிலை போட்டு, மஞ்சள் கரைச்சுவிட்டு, தலைக்கு தண்ணி விடறான்.
ஜனனி காதலுடன் அவன் முகத்தை பார்த்துகிட்டே இருக்கா. மக்கு மர மண்டை சந்தோஷுக்கு இந்த காதல் ஏன்தான் புரிய மாட்டேங்குதோ... தலை முடிக்கு சாம்பிராணி ரொம்ப அழகா போட்டு விடறான். கடவுளே இந்த சந்தோசம் எனக்கு நிலைக்கணும்னு ஜனனி வேண்டிக்கறா.

டைவர்ஸுக்கு அப்ளை பண்ணி இருந்ததுல அந்த லாயர் உங்க போலவே கேஸ் ஒண்ணு வந்திருக்கு. எப்படி, என்னென்ன பேசணும்னு வந்து பார்த்துக்கோங்க சார்னு போனில் சொல்றார். சந்தோஷ் நண்பனோட கோர்ட்டுக்கு போறான்.
அங்கே, விவாகரத்து வேணும்னு புருஷன் அபாண்டமான பொண்டாட்டி மேல பொய், அவதூறு சொல்றதை கேட்டு நொந்து போன சந்தோஷ்.. என் ஜனனியை பத்தி தப்பா பேசணுமாம்டான்னு கண் கலங்க பேசறான்.
ஓ.. உன் ஜனனியான்னு கேட்டு, அப்போ டைவர்ஸ் வேணாம்னு சொல்லிடுன்னு சொல்றான். சக்தி வந்து என்னை கேட்டா நான் என்னடா பதில் சொல்றதுன்னு சந்தோஷ் கேட்க .. அப்போ டைவர்ஸ் பண்ணிடுன்னு சொல்றான் நண்பன்.
என்னால சக்தி கையை பிடிக்கவும் முடியலை, ஜனனி கையை விடவும் முடியலைடான்னு கலங்கறான். வாழ்க்கை மனிதர்களுக்குள் மனிதர் எப்படி எல்லாம் வேறு பட்டதா இருக்கு பாருங்க...
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications