GV Prakash: ஜி.வி.பிரகாஷ் நல்லாதான் இசையமைக்கிறாரு! ஆனால் நடிப்பு மட்டும் ஏன் கை கொடுக்கல தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஜி.வி. பிரகாஷ் ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக, பல பிளாக்பஸ்டர் படங்களுக்கு இசை அமைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். ஆனால், இசையமைப்பாளராக வெற்றி கண்ட இவருக்கு, நடிகராக அந்த அதிர்ஷ்டம் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
நடிகனாக தொடங்கிய பயணம்
ஜி.வி. பிரகாஷ், "டார்லிங்" திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதால், தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். ஆனால், அவர் தேர்வு செய்யும் கதைகளும், அவரது நடிப்பு ஸ்டைலும் பெரிய அளவிலான வெற்றியை வாரிக் கொடுக்கவில்லை. ஒரு சில படங்கள் இயல்பாக ஓடியதாலும், பெரும்பாலான படங்கள் ரசிகர்களை ஈர்க்க முடியாததாலும் அவர் ஒரு "வெற்றி நாயகன்" என்ற அந்தஸ்த்தை பெறவில்லை.

தொடர் தோல்விகளும், தீராத ஹீரோ ஆசையும்
நடிகனாக ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து பல படங்களில் தோல்வியை சந்தித்தாலும், கதாநாயகனாக நடிக்க அவர் உறுதியாக இருக்கிறார். பல ஹிட் நடிகர்கள் கூட சில தோல்விகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டு வருவதுண்டு. ஆனால் ஜி.வி.பிரகாஷ், தனது கேரியரில் மாற்றம் செய்யாமல் தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இது அவரின் ஹீரோ ஆகும் விருப்பத்தையும், சினிமாவில் நிலைப்பதற்கான போராட்டத்தையும் காட்டுகிறது.
தயாரிப்பாளர்களை ஈர்க்கும் யுக்தி
பொதுவாக, ஒரு நடிகரின் படம் தோல்வியடைந்துவிட்டால், அடுத்த படத்திற்காக அவரை தயாரிப்பாளர்கள் அணுக மாட்டார்கள். ஆனால் ஜி.வி. பிரகாஷ், தனது படங்களுக்கு இசையமைத்து, தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தொகையை மிச்சப்படுத்தி விடுகிறார். தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளருக்கு படத்திற்கு கொடுக்க வேண்டிய தொகை பெரிய அளவில் இருக்கும். ஆனால், ஜி.வி. பிரகாஷ் தனது படங்களுக்கு தான் இசையமைத்தால், அந்த செலவு குறையும். இது தயாரிப்பாளர்களுக்கு ஒரு நன்மை என்பதால், அவரை ஹீரோவாக ஒப்புக் கொள்கிறார்கள்.
புதுமுகங்களுக்கு இடமளிக்க வேண்டிய நேரம்?
தமிழ் சினிமாவில் திறமையான புதிய நடிகர்கள் அதிகம் வருகின்றனர். அவர்களுக்காக தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தர வேண்டும். ஆனால், சிலரின் தனிப்பட்ட மார்க்கெட்டிங் யுக்திகள் காரணமாக, புதியவர்களுக்கு வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. ஜி.வி. பிரகாஷின் நடிப்பில், ஒப்பனை மாற்றம், கதைத்தேர்வு மாற்றம், புதிய முந்தைய திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட முயற்சிகள் ஆகியவை தேவை.
- குரு கிருஷ்ணன்
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications